சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுங்கள் - யாழ் மாநகர முதல்வர் நியூசிலாந்து தூதுவரிடம் கோரிக்கை

By Vishnu

05 Oct, 2022 | 03:54 PM
image

( எம்.நியூட்டன்)

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுங்கள் என யாழ் மாநகர சபை முதல்வர்  சட்டத்தரணி வி மணிவண்ணன் நியூசிலாந்து நாட்டுத் தூதுவரிடம் கோரிக்கை முன்வைத்தார்.

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் நியூசிலாந்து நாட்டுத் தூதுவர் மிச்சல் அபேல்டன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு யாழ்  மாநகர சபையில் இன்று புதன்கிழமை (05) இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் போது ,உள்ளுராட்டசி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பிலும்,யாழ் மாநகர சபையின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் தூதுவர் விரிவாக கேட்டறிந்து கொண்டார்.

இதன் போது மாநகர முதல்வர்,

நாட்டில் உள்ளூராட்சி  தேர்தல்கள்  நடைபெறாமல் உள்ளது.,குறிப்பாக நீண்ட காலமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாமல் உள்ளது.

2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெற்ற பின்னர் ,நான்கு வருடங்களுக்கு பின்னர் இம்முறை தேர்தல் நடைபெறவேண்டும்.

ஆனால் தற்போது வரை அதற்கான எந்த நடவடிக்கையும் அரசு முன்னெடுக்கவில்லை.பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ,புதிய அரசு ஒன்று அமைய வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்.ஆகவே இவ்வாறான தேர்தல்கள் நடைபெறுவதற்கு நியூசிலாந்து அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார் .

இதேவேளை  இலங்கை அரசுக்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற போராட்டங்களில் தமிழ் மக்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை என தூதுவர் வினவினவியபோது யாழ் மாநகர முதல்வர் வெறுமனே முகங்கள் மாறுவதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் ஆராயப்பட்டு , அடிப்படை உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும். மஹிந்த போன பின்னர் ரணில் வருவது என்ற செயற்பாடுகளை தமிழ் மக்கள் தமது தீர்வுகான வழியாக நினைக்கவில்லை. இதனால் தமிழ் மக்கள் கொழும்பில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் சர்வதேச அழுத்தம் மூலம் தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

பொருளாதார பிரச்சினைக்கு புலம் பெயர் உறவுகள் உதவி செய்வதற்கு தயாராக உள்ளனர்.அதற்கு தமிழ் மக்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான தீர்வை அழுத்தங்கள் மூலம்  பெற்றுத் தர வேண்டும்.அரசால் நிர்மூலமாக்கப்பட்ட கட்டடம் இப்போது பொருளாதார பிரச்சினையால் இடை நடுவே நிற்கிறது.அதனை சீர் செய்வதற்கு உதவி செய்ய வேண்டும்.

இந்திய நிதிப் பங்களிப்பில் அமைக்கப்பட்ட கலாசார மண்டபம் மாநகர சபைக்கு ஒப்படைக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும்.அதே போன்று பலாலி விமான நிலையம் மக்கள் பாவனைக்கு விடப் பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் மாநகர முதல்வர் தூதுவருக்கு முன்வைத்தார். முடியுமான அழுத்தங்களை கொடுத்து மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ வழி செய்வோம் என தூதுவர் இதன் போது உறுதி மொழி வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட தூதுவர் யாழ் பொது நூலகம்  உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும்...

2022-12-02 11:05:31
news-image

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை...

2022-12-02 10:58:52
news-image

இன்றும் யாழ். கல்லுண்டாயில் 3ஆவது நாளாக...

2022-12-02 10:54:22
news-image

பணி இடை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல்...

2022-12-02 10:25:52
news-image

இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண...

2022-12-02 10:28:09
news-image

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு...

2022-12-02 10:32:00
news-image

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்...

2022-12-02 10:32:49
news-image

2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை...

2022-12-02 09:07:32
news-image

யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி...

2022-12-02 10:20:59
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-12-02 08:55:01
news-image

யாழ். வரணி குளத்தில் இருந்து சடலம்...

2022-12-02 09:03:04
news-image

நாட்டின் பல மாகாணங்களில் 75 மி.மீ....

2022-12-02 08:50:24