இந்தியாவில் உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி

By T. Saranya

05 Oct, 2022 | 01:36 PM
image

இந்தியாவில் உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 25 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

உத்தரகாண்ட், லால்தாங் பகுதியில் இருந்து பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள பிரோன்கால் பகுதிக்கு நேற்று பஸ் ஒன்று சென்றுள்ளது.

பிரோன்காலில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 50-க்கும் மேற்பட்டவர் அதில் பயணித்துக் கொண்டிருந்தனர். 

இந்நிலையில், மலைப்பாங்கான பகுதியில் இரவு 7.30 மணியளவில் பஸ் சென்றுகொண்டிருந்த போது சிம்ரி என்ற இடத்தில் உள்ள வளைவில் திரும்பும்போது சாரதியின் கட்டுப்பாடடை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பஸ்ஸில் பயணித்த 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பள்ளத்தாக்கில் இருந்து 21 பேரை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். இதில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

13,000 யுக்ரைன் படையினர் பலி: யுக்ரைனிய...

2022-12-02 10:27:47
news-image

பிரேஸில் மண்சரிவில் இருவர் பலி, 30...

2022-12-02 09:23:11
news-image

“ராவணன், ராட்சசன், ஹிட்லர்... என்னை விமர்சிப்பதில்...

2022-12-01 17:06:54
news-image

இந்தியாவின் கதையை பகிர ஜி-20 தலைமை...

2022-12-01 16:39:10
news-image

தென் ஆபிரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கு...

2022-12-01 15:54:26
news-image

கொவிட் கட்டுப்பாடுகளிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்த...

2022-12-01 15:11:13
news-image

ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபு ஹசன்...

2022-12-01 14:42:12
news-image

இந்தியா - கயானா சந்திப்பு :...

2022-12-01 14:11:24
news-image

நியூ ஸிலாந்து, பின்லாந்து பிரதமர்களின் சந்திப்புக்கு...

2022-12-01 13:21:36
news-image

இந்தியா - லாட்வியா பிரதிநிதிகள் சந்திப்பு:...

2022-12-01 16:15:14
news-image

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9...

2022-12-01 09:21:37
news-image

ஆப்கான் குண்டுவெடிப்பில் 16 பேர் பலி

2022-11-30 16:39:17