நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை விடுத்தார் லக்ஷ்மன் கிரியெல்ல

Published By: Digital Desk 5

05 Oct, 2022 | 02:40 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் நீங்கள் நிகழ்நிலையிலேயே நடத்தினீர்கள். அதனால் நவீன தொழிநுட்பங்களை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் சபையில் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி, லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடுகையில்,

எமது உறுப்பினர்கள் பல வெளிநாடுகளுக்கு சென்றிருக்கின்றனர். அதனால் கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு தலைவர்கள் தெரிவு தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதாக இருந்தால், நிகழ்நிலை முறையில் நடத்தவேண்டும் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் கேட்டுக்கொண்டபோது,

அதற்கு சபாநாயகர் அவ்வாறு வாக்களிப்பு நடத்துவதற்கு நிலையியற் கட்டளையில் எந்த ஏற்பாடும் இல்லை. அவ்வாறு இருந்தால் நிலையியற் கட்டளையில் திருத்தம் மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதற்கு லக்ஷ்மன் கிரியெல்ல பதிலளிக்கையில்,

நிலையியற் கட்டளையில் அதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன. கைகளை உயர்த்தியும், இலத்திரணியல் அடிப்படையிலும் குரல் வழியாகவும் வாக்களிப்பு நடத்த ஏற்பாடு இருக்கின்றது. 

அதேபோன்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் நீங்கள் நிகழ்நிலையிலேயே நடத்தினீர்கள். அதனால் நவீன தொழிநுட்பங்களை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

அதற்கு சபாநாயகர், சபை இணக்கம் தெரிவித்தால் நிகழ்நிலையில் வாக்களிப்பு நடத்த தயார். இது தொடர்பில் எனக்கு தீர்மானிக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07