பொருளாதார நெருக்கடி மனித உரிமை விவகாரங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மனித உரிமை பேரவையின் புதிய தீர்மானம் கரிசனை வெளியிட்டுள்ளது.
அதிகரித்த உணவு பாதுகாப்பின்மை கடும் எரிபொருள் தட்டுப்பாடு மருந்துபொருட்களிற்கு பற்றாக்குறை குடும்பங்களின் வருமானம் குறைவடைந்தமை போன்றவற்றால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி மனித உரிமைகளின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து மனித உரிமை பேரவை தீர்மானம் கரிசனை வெளியிட்டுள்ளது.
நாளாந்த ஊதியம் பெறுவோர் பெண்கள் குழந்தைகள் முதியோர்கள் மற்றும் ஊனமுற்றோர் உட்பட மிகவும் பின்தங்கிய தனிநபர்களின் உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை மனித உரிமை பேரவை தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.
அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான வன்முறைகள் கைதுகள் அரசாங்க ஆதரவாளர்களிற்கு எதிரான வன்முறைகள் உயிரிழப்புகள் காயங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழிக்கப்பட்டவை சேதமாக்கப்பட்டவை உட்பட ஏப்பிரல் 22 ற்க்கு பின்னர் உருவாகியுள்ள மனித உரிமை நிலவரம் குறித்து மனித உரிமை பேரவையின் தீர்மானம் கவலை வெளியிட்டுள்ளது.
இந்த அனைத்து தாக்குதல்கள் குறித்தும் சுயாதீன விசாரணைகளை வலியுறுத்தியுள்ள தீர்மானம் குற்றவாளிகளாக காணப்படுபவர்கள் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM