'இருவர்' முதல் 'பொன்னியின் செல்வன்' வரை - தமிழ் திரையுலகில் ஐஸ்வர்யா ராய்

Published By: Nanthini

05 Oct, 2022 | 12:32 PM
image

(குமார் சுகுணா)

லகம் முழுவதும் தமிழர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 'பொன்னியின் செல்வன்' தற்போது திரைக்கு வந்துள்ளது. இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராயின் தமிழ் சினிமா பயணம் தொடர்பில் பார்ப்போம். 

ஐஸ்வர்யா ராய்க்கு தமிழ் திரையுலகம் ஒன்றும் புதிதல்ல. அவர் அறிமுகமானதே தமிழ் சினிமாவில் தான். 25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மணிரத்னம் தான் ஐஸ்வர்யா ராயை  அறிமுகப்படுத்தினார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராயின் குரு மணிரத்னம்  என்றால் மிகையல்ல.

பொன்னியின் செல்வனில் நந்தினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது, அவரது திரையுலக வாழ்க்கையில் பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவின் பன்ட் குடும்பத்தைச் சேர்ந்த மும்பைவாசியான ஐஸ்வர்யா ராய், 1994ஆம் ஆண்டு உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் உலகளவில் பிரபலமானார். 

பின்னர், பல்வேறு விளம்பரங்களில் வலம் வந்த ஐஸ்வர்யா ராயை முதன் முதலாக திரைத்துறைக்கு  அழைத்து வந்தவர், மணிரத்னம் தான். தமிழக அரசியலை மையப்படுத்தி, அவர் எடுத்த 'இருவர்' திரைப்படத்தில் ஜெயலலிதாவின் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தார்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில், 2 நிமிடங்கள், ஒரே டேக்கில் ஐஸ்வர்யா நடித்தார் என மணிரத்னம் பாராட்டியுள்ளார். அவரிடம் 10, 15 டேக் வாங்கினேன் என்று ரஜினி சொல்லும்போது, முதல் படத்தில் ஒரே டேக்கில் ஐஸ்வர்யா ஓகே ஆனார்  என்றால், அவரது திறமையை எடை போடலாம். 

1997ஆம் ஆண்டு 'இருவரில்' தொடங்கிய அவரது கலைப்பயணம் இன்று வரை தொடர்கிறது.

1997ஆம் ஆண்டு இருவர் படத்தில் அறிமுகமான பின் ஐஸ்வர்யா ராய் ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துவிட்டார். 

தமிழை பொருத்தவரையில், மணிரத்னத்தின் 'இருவர்' திரைப்படத்துக்குப் பின் 1999ஆம் ஆண்டு 'ஜீன்ஸ்' திரைப்படத்தில் நடிக்க வைத்தார், இயக்குநர் ஷங்கர். 

அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி, அஜித்துடன் இணைந்து 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில்  நடித்தார். அடுத்து, 'இராவணன்', 'எந்திரன்' ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

ஐஸ்வர்யா ராயை தமிழில் மட்டுமல்ல, ஹிந்தியிலும் இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். 

ஐஸ்வர்யா ராய் - மணிரத்னம் கூட்டணியில் 'இருவர்', 'ராவணன்', 'குரு', 'பொன்னியின் செல்வன்' என நான்கு திரைப்படங்கள் உருவாகியுள்ளன. 

தமிழில் ஐஸ்வர்யா நேரடியாக நடித்த திரைப்படங்கள் மணிரத்னம் இயக்கத்தில் 3, ஷங்கர் இயக்கத்தில் 2, ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஒன்று என மொத்தம் 6 படங்கள். இது தவிர 'குரு', 'தாளம்' உள்ளிட்ட படங்களும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் 5 படங்களில் ஐஸ்வர்யா நடித்துள்ளார். 'ப்ரைக்ட் & பிரஜிடியூஸ்', 'த மிஸ்ட்ரஸ் ஒஃப் தி ஸ்பைசஸ்', 'ப்ரொவோக்ட்', தி லாஸ்ட் லீஜியன்', 'தி பிங்க் பேந்தர்ஸ்-2' ஆகிய படங்களாகும். இதில் 'தி பிங்க் பேந்தர்ஸ்-2' புகழ்பெற்ற ஹொலிவுட் திரைப்படமாகும். 

ஐஸ்வர்யா ராய் 2010ஆம் ஆண்டு 'ராவணன்', 'எந்திரன்' ஆகிய திரைப்படங்களில் நடித்தார். அதன் பின்னர் 2012ஆம் ஆண்டுக்கு பின் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இந்நிலையில் மணிரத்னம் மீண்டும் 'பொன்னியின் செல்வனில்' நடிக்க வைத்துள்ளார். இதில் இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். 

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே இத்திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின்...

2024-04-12 01:09:32
news-image

அமீரின் தேர்தல் கால முழக்கமாக ஒலிக்கும்...

2024-04-11 21:33:36
news-image

நடிகர் அவினாஷ் நடிக்கும் 'நாகபந்தம்' டைட்டில்...

2024-04-11 02:21:33
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-04-11 02:17:58
news-image

நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடிக்கும்...

2024-04-11 02:01:18
news-image

விதார்த் நடிக்கும் 'லாந்தர்' பட ஃபர்ஸ்ட்...

2024-04-10 13:13:42
news-image

உதைபந்தாட்ட பயிற்சியாளரின் வாழ்வியலை பேசும் 'மைதான்'

2024-04-10 13:14:51
news-image

தப்பி பிழைக்குமா 'வல்லவன் வகுத்ததடா'..!

2024-04-10 13:32:19
news-image

குகன் சக்கரவர்த்தியார் நடித்து இயக்கும் 'வங்காள...

2024-04-10 10:51:22
news-image

டிஜிட்டலில் வெளியாகும் 'பிரேமலு'

2024-04-10 10:20:51
news-image

வைட் ரோஸ் - விமர்சனம்

2024-04-08 17:11:02
news-image

டபுள் டக்கர் - விமர்சனம்

2024-04-08 17:09:06