(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)
பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அரசினால் நியமிக்கப்பட்டுள்ள தேசிய சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வெளியேறியுள்ள நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தேசிய சபையில் உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்பபட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்ற அமர்வை 05 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து சபை அறிவிப்பை குறிப்பிடுகையில் சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சபாநாயகர் மேலும் குறிப்பிட்டதாவது,
தேசியசபை உறுப்பினர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் விலகியுள்ளார். அவரது விலகலினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தேசிய சபையில் உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார் என்றார்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன கடந்த செப்டெம்பர் 20 ஆம் திகதி தேசிய சபையை உருவாக்குவது தொடர்பான பிரேரணையை சபையில் முன்வைத்த நிலை அது ஏகமனதாக சபையில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த தேசிய சபையில் 35 க்கும் மேற்படாத பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர். இதில் பலர் ஏற்கனவே நியமிக்கப்பட்டு விட்ட நிலையிலேயே தற்போது புதிதாக சம்பிக்க ரணவக்க உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM