சூதாட்டத்தில் 269 ஆயிரம் டொலர்களை வென்ற பெண் மோசடியில் ஈடுபட்டதாக எதிரணி வீரர் குற்றச்சாட்டு

By Vishnu

05 Oct, 2022 | 12:45 PM
image

போக்கர் சூதாட்­டத்தில் எதிர்­பா­ராத வகையில் வெற்­றி­யீட்­டிய பெண்­ணொ­ருவர், மோச­டி­யான முறையில் இவ்­வெற்­றியை பெற்­ற­தாக அவ­ருடன் போட்­டி­யிட்ட மற்­றொரு சூதாட்­டக்­காரர் குற்றம் சுமத்­தி­யுள்ளார் அதிர்வு ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய மோதிரம் ஒன்றை பயன்­ப­டுத்­தியும் இவ்­வெற்­றியை அப்பெண் பெற்­றி­ருக்­கலாம் என கருத்து தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த  பிர­பல போக்கர்  (poker) சூதாட்­டக்­காரர் காரெட் அடேல்ஸ்டெய்ன் பங்­கு­பற்­றிய போக்கர் சூதாட்­டத்தில், ரொபி ஜேட் லியு எனும் பெண் வெற்­றி­யீட்­டினார்.

அமெ­ரிக்­காவின் லாஸ் வேகாஸ் நக­ரி­லுள்ள ஹஸ்ட்லர் கசி­னோவில் கடந்த வியா­ழக்­கி­ழமை இந்த சூதாட்டப் போட்டி நடை­பெற்­றது. இதில்; ரொபி ஜேட் லியு 269,000 டொலர்­களை வென்றார்.

இவ்­வெற்றி சூதாட்ட உலகில் பெரும் அதிர்ச்­சி­யையும் பர­ப­ரப்­பையும் ஏற்­ப­டுத்­தி­யது. 

காரெட் அடேல்ஸ்டெய்ன் போக்கர் சூதாட்­டத்தில் பிர­சித்தி  பெற்­றவர். அவ­ருடன் மோதிய ரொபி ஜேட் லியு இச்­சூ­தாட்­டத்தில் புதி­யவர் என்­பது இதற்குப் பிர­தான காரணம்.

35 வய­தான ரொபி ஜேட் லியு சுமார் ஒரு வரு­ட­மாக இவ்­வி­ளை­யாட்டில் ஈடு­பட்டு வரு­கிறார் என அவரின் பயிற்­றுநர் தெரி­வித்­துள்ளார். 

ஆனால்,  36 வய­த­னான அடேல்ஸ்டெய்ன், சுமார் ஒரு தசாப்த கால­மாக, தொழிற்சார் ரீதியில் அவர் போக்கர் விளை­யாட்டில் ஈடு­பட்டு வரு­கிறார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

காரெட் அடேல்ஸ்டெய்ன் தன்னை அச்­சு­றுத்­தி­யா­கவும் லியு தெரி­வித்­துள்ளார். 

எனினும், இக்­குற்­றச்­சாட்டை காரெட் அடேல்ஸ்டெய்ன் நிரா­க­ரித்­துள்ளார். அதே­வேளை, ரொபி ஜேட் லியு

ஏதோ ஒரு வழியில் மோசடி செய்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ளார். எனினும் குறித்த கசினோ நிலையம் இதில் எந்த வழி­யிலும் சம்­பந்­தப்­ப­ட­வில்லை என அடேல்ஸ்டெய்ன் கூறி­யுள்ளார்.

இச்­சூ­தாட்­டத்தில் வெற்­றி­யீட்­டு­வ­தற்­கான ஆலோ­ச­னை­களை அதிர்வு ஏற்­ப­டுத்தும் மோதிரம் ஒன்றின் மூலம்  லியு பெற்­றி­ருக்­கலாம் என சந்­தேகம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால், இக்­குற்­றச்­சாட்டை ரொபி ஜேட் லியுவும் அவரின் பயிற்­றுநர் பராஸ் ஜெகாவும் நிரா­க­ரித்­துள்­ளனர்.

செஸ் (சது­ரங்கம்) விளை­யாட்டில் உலகின் முதல்­நிலை வீர­ரான நோர்­வேயின் மெக்னஸ் கார்ல்­சனை (35) அமெ­ரிக்­காவைச் சேர்ந்த 19 வயது வீரர் ஹான்ஸ் நீமன் அண்­மையில் அதிர்ச்­சி­க­ர­மாக தோற்­க­டித்­தமை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. 

அதை­யடு;த்து மற்­றொரு போட்­டியில் இவர்கள் இரு­வரும் மோதி­ய­போது, ஒரு நகர்த்­தலின் பின்னர் போட்­டி­யி­லி­ருந்த கார்ல்சன் வெளி­யே­றினார். ஹான்ஸ் நீமன் மோசடி செய்கிறார்  மெக்னஸ் கார்ல்சன் குற்றம் சுமத்தியமை சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்­நி­லையில், போக்கர் விளை­யாட்­டிலும் அதைப் போன்ற குற்­றச்­சாட்டு ரொபி ஜேட் லியு­வுக்கு எதி­ராக சுமத்­தப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

13,000 யுக்ரைன் படையினர் பலி: யுக்ரைனிய...

2022-12-02 10:27:47
news-image

பிரேஸில் மண்சரிவில் இருவர் பலி, 30...

2022-12-02 09:23:11
news-image

“ராவணன், ராட்சசன், ஹிட்லர்... என்னை விமர்சிப்பதில்...

2022-12-01 17:06:54
news-image

இந்தியாவின் கதையை பகிர ஜி-20 தலைமை...

2022-12-01 16:39:10
news-image

தென் ஆபிரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கு...

2022-12-01 15:54:26
news-image

கொவிட் கட்டுப்பாடுகளிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்த...

2022-12-01 15:11:13
news-image

ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபு ஹசன்...

2022-12-01 14:42:12
news-image

இந்தியா - கயானா சந்திப்பு :...

2022-12-01 14:11:24
news-image

நியூ ஸிலாந்து, பின்லாந்து பிரதமர்களின் சந்திப்புக்கு...

2022-12-01 13:21:36
news-image

இந்தியா - லாட்வியா பிரதிநிதிகள் சந்திப்பு:...

2022-12-01 16:15:14
news-image

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9...

2022-12-01 09:21:37
news-image

ஆப்கான் குண்டுவெடிப்பில் 16 பேர் பலி

2022-11-30 16:39:17