அமெரிக்காவைச் சேர்ந்த யுவதி ஒருவர், பூனையொன்றை காப்பாற்றுவதற்காக மனிதர் ஒருவரை கொலை செய்ததாக அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கலிபோர்னியா மாநிலத்தில் வசிக்கும் ஹனா ஸ்டார் எஸ்ஸர் எனும் 20 வயதான யுவதி பூனைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர்.
இவர் 40 வயதான லூயிஸ் அன்தனி விக்டர் என்பவர் மீது வேண்டுமென்றே வாகனத்தை ஏற்றி கொலை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பூனையொன்றின் மீது வாகனத்தை ஏற்றி அதனை கொலை செய்ய முயற்சிப்பதாக ஹனா எஸ்ஸர் கருதினார். இதனால் தனது வாகனத்திலிருந்து இறங்கிய எஸ்ஸர், விக்டரை திட்டினார். அப்போது எஸ்ஸருடன் பேசுவதற்கு விக்டர் முயன்றார்.
எனினும், மீண்டும் தனது வாகனத்துக்குள் ஏறிய ஹனா எஸ்ஸர், வாகனத்தை திருப்பி அதனை விக்டரை நோக்கி செலுத்தினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, வேண்டுமென்றே விக்டரை நோக்கி வாகனத்தை திருப்பி மிக வேகமாக அவர் மீது ஹனா எஸ்ஸர் மோதியதாகவும் இதனால், விக்டர் தூக்கி வீசப்பட்டார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் விக்டர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து ஹனா எஸ்ஸரை பொலிஸார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு 20 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM