பாகிஸ்தான் இன்டர்நெஷனல் எயார்லைன்ஸ் நிறுவனம், தனது விமான பணியாளர்களின் ஆடைகள், உள்ளாடைகள் தொடர்பாக விடுத்த அறிவித்தல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மேற்படி அறிவித்தலை வாபஸ் பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தேசிய விமான சேவை நிறுவனமாக பாகிஸ்தான் இன்டர்நெஷனல் எயார்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனம் உள்ளது.
அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கடந்த வியாழக்கிழமை விடுத்த அறிவித்தல் ஒன்றில் விமானப் பணிக்குழுவினர் உள்ளாடைகளை அணிவது அவசியம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக இந்நிறுவனத்தின் மனித வளத் திணைக்களம் விடுத்த அறிக்கையில் விமானப் பணியாளர்களான ஆண்களும் பெண்களும் உள்ளாடைகள் அணிவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
'நகரங்களுக்கு இடையில் பயணம் செய்யும்பொதும், ஹோட்டல்களில் தங்கியிருக்கும் வேளைகளிலும், பல்வேறு இடங்களுக்கு செல்லும்போதும் விமானப் பணிக்குழுவினர் சிலர் சாதாரணமாக ஆடையணிவது மிகுந்த கவலையுடன் அவதானிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய முறையில் ஆடையணிந்திருப்பதானது, அதை அணிந்திருப்பவர் தொடர்பாக மாத்திரமல்லாமல் நிறுவனம் குறித்தும் பார்வையாளர்களிடம் எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தக்கூடும்.
விமானப் பணிக்குழுவினர் முறையான உள்ளாடைகளுக்கு மேல், முறையான மேலாடை அணிந்திருக்க வேண்டும்.
ஆண்களும் பெண்களும் அணியும் ஆடைகள் எமது கலாசாரத்துக்கும் தேசிய நெறிமுறைகளுக்கு இசைவானதாக இருக்க வேண்டும்' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பணிக்குழுவினரின் உள்ளாடைகள் தொடர்பாக விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதையடுத்து மேற்படி சுற்றுநிருபம் வாபஸ் பெறப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் இன்டர்நெஷனல் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் மனித வளத் திணைக்களம், கடந்த வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையில், மேற்படி ஆலோசனையின் பின்னாலுள்ள விடயம், ஊழியர்கள் முறையாக ஆடையணிய வேண்டும் என்பதாக இருந்தபோதிலும், தற்செயலாக முறையற்ற வார்த்தை தெரிவுகள் இடம்பெற்றுவிட்டன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
'வெளியிடப்பட்ட இந்த வார்த்தைகளைவிட மேலும் நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகள் காரணமாக துரதிஷ்டவசமாக நிறுவனம் கேலிக்குள்ளாக்கப்படுகிறது. இதற்காக நான் வருந்துகிறேன்' என மேற்படி நிறுவனத்தின் மனித வளத்துறை திணைக்களத்தின் தலைவர்' தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM