பல்கலைக்கழகங்களில் பல கொடுமைகள் இடம்பெறுகின்றன - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அதிர்ச்சித் தகவல் !

Published By: Vishnu

05 Oct, 2022 | 11:30 AM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம். வசீம்)

பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு அப்பாற்பட்ட கொடுமைகள் இடம்பெறுகின்றன. பல்கலைக்கழக மாணவர்களினதும்,பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் வேந்தர்களின் உரிமையினை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் புதன்கிழமை (5) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை பதவி விலக்கிய எமக்கு வேந்தரை பதவி விலக்க செய்வது பெரிதொரு விடயமல்ல என பேராதனை பல்கலைக்கழகத்தில் ஒருபிரிவினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழக வேந்தர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு அப்பாற்பட்ட பல கொடுமைகள் இடம்பெறுகின்றன.பல்கலைக்கழகத்துக்குள் அடிப்படைவாதம்,பாசிஷவாதம் உள்ளிட்ட பல முறையற்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவன் கைகடிகாரம் அணிந்துக் கொண்டு பல்கலைக்கழகத்துக்கு வர கூடாது.முதலாம் ஆண்டு மாணவி சீத்தை துணியிலான ஆடை அணிய வேண்டும், காதணி,மாலை ஆகியவற்றை அணிய கூடாது என பகிடிவதைகள் இடம்பெறுகின்றன.

ஜனநாயகம் தொடர்பில் பலர் தமக்கு ஏற்றாட்போல் வரைவிலக்கணம் செய்துக்கொள்ளலாம்.வீடுகளை எரித்து,வன்முறை சம்பவங்களில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் அவர்களுக்கு ஒரு மணித்தியாலத்தில் பிணை வழங்கப்பட்டதை கைத்தட்டி வரவேற்றமை ஜனநாயகம் அல்ல.

பல்கலைக்கழக மாணவர்கள்,விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக வேந்தர்கள் ஆகியோரின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சுக்கு உண்டு,அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19