கதாசிரியரானார் யோகி பாபு

Published By: Nanthini

05 Oct, 2022 | 11:23 AM
image

மிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நாயகனான யோகி பாபு பெயரிடப்படாத புதிய படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கதையின் நாயகனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

'வில் அம்பு' படத்தின் இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக நடிகை சம்ஸ்கிருதி நடிக்கிறார். இவர்களுடன் அழுத்தமான வேடத்தில் வில்லன் நடிகரும், சண்டைப்பயிற்சி இயக்குநருமான பெப்சி விஜயன் நடிக்கிறார்.

ஏனைய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்தாலும், இந்த படத்துக்கான கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இருக்கிறார், யோகி பாபு. 

லெமன் லீப் புரொடக்ஷன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. 

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ''யோகி பாபுவை சந்தித்தபோது அவர் இந்த படத்தினை இயக்கும் வாய்ப்பை எனக்களித்தார். கதையை கேட்டதும் வியந்து, இயக்க ஒப்புக்கொண்டேன். 

தந்தைக்கும்  மகனுக்கும் இடையேயான உறவை பற்றிய கதை. மகனாக யோகி பாபு நடிக்கிறார். இந்த படத்துக்காக அவர் தன் உடல் எடையை கணிசமாக குறைத்துக்கொண்டிருக்கிறார்.

சென்னை மற்றும் பெங்களூரில் மூன்று கட்டங்களாக படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. யோகி பாபு சிறந்த குணச்சித்திர நடிகர் மட்டுமல்ல. நேர்த்தியான திரைக்கதை ஆசிரியருமாவார் என்பது இப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரியவரும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right