சட்டவிரோத இழுவை வலைகளைப் பயன்படுத்தி  மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நாம் ஊக்குவிக்கவில்லை - இந்திய தேசிய மீன்பிடி அபிவிருத்தி சபை 

Published By: Vishnu

04 Oct, 2022 | 09:21 PM
image

(ஹைதராபாத்திலிருந்து எம்.மனோசித்ரா)

இந்தியாவைப் பொறுத்தமட்டில் இழுவை வலைகளைப் பயன்படுத்தி (பொட்டம் ட்ரோலிங் முறைமை) மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், விஞ்ஞான ரீதியாக நோக்குமிடத்து நாம் இந்த முறைமையை மீனவர்களுக்குப் பரிந்துரைப்பதில்லை என்று இந்திய தேசிய மீன்பிடி அபிவிருத்தி சபையின் பிரதம நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி.சி.சுவர்ணா தெரிவித்துள்ளார்.

அதேவேளை இம்முறைமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் தீர்மானம் வரவேற்கத்தக்கதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆரம்பத்தில் மீன்பிடித்துறை என்பது மிகமுக்கிய துறையாகக் காணப்படாதபோதிலும், தற்போது அத்துறையானது எவ்வாறு நாட்டின் முக்கிய துறைகளில் ஒன்றாகவும் பெருமளவானோருக்கு வாழ்வாதாரத்தை ஈட்டித்தரும் துறையாகவும் மாற்றமடைந்திருக்கின்றது என்பது குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

அத்தோடு விவசாய ஆராய்ச்சி தொடர்பான இந்திய கவுன்சிலின் கீழுள்ள 6 முக்கிய கட்டமைப்புக்கள் மீன்பிடித்துறையில் மாத்திரம் கவனம்செலுத்துவதாகவும் அக்கட்டமைப்புக்கள் கேரளா, புபனேஸ்வர், சென்னை, ஆந்திரா உள்ளடங்கலாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களையும் தளமாகக்கொண்டியங்குவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி மீன்பிடித்துறையின் செயற்திறனை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்த்திருக்கும் செயற்திட்டங்கள் குறித்தும் கலாநிதி சுவர்ணா தெளிவுபடுத்தினார்.

அதேவேளை பாரமான இழுவை வலைகளைப் பயன்படுத்தி (இலங்கையில் சட்டவிரோதமானதாகக் காணப்படும் 'பொட்டம் ட்ரோலிங்' முறை) மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது இந்தியாவில் அங்கீகரிக்கப்படுகின்றதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த இந்திய தேசிய மீன்பிடி அபிவிருத்தி சபையின் மற்றுமொரு அதிகாரியான விஜயகுமார், 'ட்ரோலிங்' முறை தொடர்பில் இலங்கை மேற்கொண்டிருக்கும் தீர்மானத்தை வரவேற்பதாகவும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசித்து, அதன் விளைவாகக் கைதுசெய்யப்படு;ம பின்னணியில் அனைத்து 'ட்ரோலிங்' முறைகளையும் தடைசெய்திருப்பது சிறந்த விடயம் என்றும் தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி இந்தியாவைப் பொறுத்தமட்டில் இம்முறையிலான மீன்பிடி நடவடிக்கை சட்டபூர்வமானது எனும்போதிலும், தாம் விஞ்ஞான ரீதியாக இம்முறையைப் பரிந்துரைப்பதில்லை என்றும் விஜயகுமார் குறிப்பிட்டார்.

எனவே மீனவர்கள் மத்தியில் காணப்படும் பொதுவான மனநிலையை மாற்றியமைப்பதற்கும், அத்தகைய இழுவை வலைகளைப் பயன்படுத்தும் நடைமுறைக்குப் பதிலாக சூழலுக்கு ஏற்புடைய முறைகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்கும் அவசியமான முயற்சிகளைத் தாம் மேற்கொண்டுவருவதாகச் சுட்டிக்காட்டிய கலாநிதி.சி.சுவர்ணா, ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கை உள்ளடங்கலாக இவ்வாறான விவகாரங்களில் சர்வதேச மட்டத்திலான அழுத்தங்கள் காணப்படுவதாகவும், இந்திய அரசாங்கம் அதற்குரியவாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09