காதல் வாழ்க்கையை புரிந்துகொள்ள...

Published By: Devika

04 Oct, 2022 | 04:56 PM
image

காதல் வாழ்க்­கையில் சின்ன சின்ன சண்­டை­கள் வருவது இயல்புதான். அத்தகைய குட்டி சண்­டைகள் வரா­மல் இருக்க, உங்கள் காத­லியை நீங்கள் நன்கு புரிந்து வைத்திருக்கவேண்­டும். அத்­தகைய புரி­தலை உண்­டாக்கும் சில விஷயங்­களாவன,  

குத்திக்காட்டாதீர்கள்: காதலி தப்பே செய்திருந்தாலும் எடுத்த­­வுடனே ‘எனக்குத் தெரியும் நீ இப்படித்தான் செய்வே’ ன்னு என ஆரம்பிக்காதீர்கள். வேறு ஒருவர் குத்திக்­காட்டுவதை விட, நீங்கள் குத்திக்காட்டுவதுதான் அவருக்கு அதிகம் வலிக்கும். 

இயல்பாக இருங்கள்: உங்கள் காதலியுடன் இருக்கும்போது நீங்கள் நீங்களாகவே இருங்கள். இம்ப்ரெஸ் செய்வதாக நினைத்து அளவுக்கு அதிக­மாக ‘ஐஸ்’ வைத்தால், இது­தான் உங்கள் குணம் என நினைத்துக்­கொள்வார். என்றாவது ஒருநாள் உங்­களின் நிஜ முகம் தெரியவரும்­போது அதிர்ச்சியடைவார். நீங்கள் நீங்களாக இருப்பதைத்தான் எந்தப் பெண்ணும் விரும்புவார். 

அக்கறை: சுயமான முடிவுகளை எடுப்பதைப் பெண்கள் விரும்பினாலும், தன் மீது அக்கறையுள்ள ஆணைத்­தான் எந்த ஒரு பெண்ணும் விரும்பு­வார். காதலி என்பவர், உங்க­ளின் நிரந்தரத் தோழி; பிரியவே கூடாது என நீங்கள் நினைக்கும் வாழ்க்கைத்­துணை. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உங்களைப் பற்றிய விஷயங்களை விட அவர் குறித்த விஷயங்­களை நீங்கள் அதிகம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அவரின் பிறந்த நாள் தொடங்கி அனைத்து விவரங்களையும் நீங்கள் தெரிந்து வைத்­திருக்க வேண்டும் என விரும்பு­வார். அதை சரியான நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் எதிர்­பார்ப்­பார். 

இடைவெளி: இருவரும் எவ்­வளவு அன்னியோனியமாக இருந்­தா­லும் தனி மனித சுதந்திரம் முக்கி­ய­மா­னது. இருவருக்கும் இடையே போது­மான இடைவெளி இருப்பதை­யும் அவர் விரும்புவார். இருவரும் இருக்கி­றீர்கள். அப்போது ஒரு அழைப்பு வருகிறது. அவர் பேசி முடித்தவு­டனே 'போனில் யார்?” என்று கேட்பது உங்கள் காத­லிக்கு கோபம் வரவழைக்கும் கேள்வி. உங்களிடம் சொல்ல­வேண்டியதாக இருந்தால் அவரே சொல்வார். அந்த இடைவெளியை அவருக்கு வழங்காமல் 'யார்... என்ன?” என்பது போன்ற கேள்வி­­களை நீங்கள் எழுப்பினால், அது­­­தான் உங்கள் காதலுக்கு நீங்களே வைக்­­கும் ‘டைம்பாம்’. உங்கள் மொபை­­­லின் பேட்டன் லொக் முதல் மெயில் பாஸ்­வேர்ட் வரை காதலிக்­குத் தெரிந்தி­ருந்தாலும், அவருக்­கான சுதந்திரத்தை கொடுத்தே ஆகவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right