நாட்டில் உணவுப் பாதுகாப்பின்மை அச்சுறுத்தல் : அரசாங்கம் துரித நடவடிக்கையில் - பந்துல

By Nanthini

04 Oct, 2022 | 04:12 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

பொருளாதார நெருக்கடியினால் நாட்டில் உணவுப் பாதுகாப்பின்மை அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை முழு அளவில் இல்லாதொழிக்கும் வகையில் துரித தீர்மானங்களை எடுத்து, செயல்படுத்தி வருகின்றோம்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உணவின்றியோ அல்லது போஷாக்கு குறைபாட்டினாலோ மக்கள் பாதித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

அவ்வாறு உணவு தேவைப்படும் குடும்பங்களை அணுகி, தேவையான உதவிகளை வழங்க உணவுக் கொள்கை குழு ஊடாக நாடளாவிய ரீதியில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.  

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு செவ்வாய்க்கிழமை (ஒக் 4) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதன்போது தெளிவுபடுத்துகையிலேயே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் போஷாக்கினை உறுதிப்படுத்தல் போன்ற தீர்மானங்களை மையப்படுத்திய கிராமிய மட்டத்திலிருந்து மேல் மட்டத்தை நோக்கிய மூலோபாயத்தை பின்பற்றி, கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்தும் நோக்கில் பல்துறை சார் பொறிமுறையொன்றை அரசாங்கம் அண்மையில் நிறுவியது.

உணவுக் கொள்கைக் குழு அத்தியாவசிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகம் செய்தல் உள்ளிட்ட ஒட்டுமொத்த பொறிமுறைக்கு வழிகாட்டல், கண்காணித்தல்,  பல்வேறு நிர்வாக மட்டங்களில் சமூகத்தில் அதிக இடருக்கு உள்ளாகக்கூடியவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இயலுமை முதலியவை குறித்த பொறிமுறை மூலம் உறுதிப்படுத்தப்படும். 

இப்பொறிமுறையை முறை சார்ந்த வகையிலும் வினைத்திறனாகவும் நடைமுறைப்படுத்துவதற்காக விநியோகம், விலை மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான குறுகிய கால பிரச்சினைகள் உள்ளிட்ட விநியோகச் சங்கிலி நடவடிக்கைகள் தொடர்பாக உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், நுகர்வோருக்கிடையே நம்பிக்கையை கட்டியெழுப்புதல் முதலிய நீண்டகால வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில், குறித்த நிறுவனங்களின் தலைமையில், ஏற்புடைய நிறுவனங்களின் தலைவர்களின் பங்கேற்புடன் உணவுக் கொள்கை குழுவை நிறுவுவதற்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவுத் திட்டம்:

வருடாந்தம் 4 பில்லியன் ரூபா செலவிட்டு 7,926 பாடசாலைகளில் 1.08 மில்லியன் மாணவர்களை இலக்கு வைத்து, பாடசாலை பகலுணவு வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

வறுமையொழிப்பு கொள்கைப் பிரகடனத்தின் கீழ் 'உணவுப் பற்றாக்குறையால் எந்தவொரு பிரஜையும் பட்டினியாக இருக்கக்கூடாது ' எனும் நோக்கத்தை இலக்காகக் கொண்ட வேலைத்திட்டங்களை அரசாங்கம் துரிதமாக மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றது.

 வறுமை மற்றும் போஷாக்கு தொடர்பாக மாவட்ட மட்டத்தில் காணப்படுகின்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, தேவையான நிதியை வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் பெற்றுக்கொண்டு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாடசாலை பகலுணவு வேலைத்திட்டத்தை விரிவாக்கம் செய்து, மேலும் ஒரு மில்லியன் மாணவர்களுக்கு முழுமையான போஷாக்கான பகலுணவுகளை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உலக வங்கி மற்றும் சீனா போன்ற நட்பு நாடுகள் ஏற்கனவே இந்த திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளன. மேலும், பல சர்வதேச அமைப்புகளுடனும் நிறுவனங்களுடனும் தொடர்புகளை கொண்டுள்ளோம். இந்த திட்டம் நடைமுறைக்கு வருமாயின், 51 வீதமான மாணவர்களுக்கு போஷாக்கான பகலுணவுத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்  என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும்...

2022-12-02 10:57:14
news-image

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை...

2022-12-02 10:58:52
news-image

இன்றும் யாழ். கல்லுண்டாயில் 3ஆவது நாளாக...

2022-12-02 10:54:22
news-image

பணி இடை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல்...

2022-12-02 10:25:52
news-image

இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண...

2022-12-02 10:28:09
news-image

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு...

2022-12-02 10:32:00
news-image

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்...

2022-12-02 10:32:49
news-image

2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை...

2022-12-02 09:07:32
news-image

யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி...

2022-12-02 10:20:59
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-12-02 08:55:01
news-image

யாழ். வரணி குளத்தில் இருந்து சடலம்...

2022-12-02 09:03:04
news-image

நாட்டின் பல மாகாணங்களில் 75 மி.மீ....

2022-12-02 08:50:24