இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல, குமார் தர்மசேன ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு

Published By: Vishnu

04 Oct, 2022 | 04:01 PM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான மத்தியஸ்தர்கள் குழாத்தில் இலங்கையைச் செர்ந்த ரஞ்சன் மடுகல்லே, குமார் தர்மசேன ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.

ஐசிசி இருபது 20 உலகக் கிண்ணம் 2022 தொடரை முன்னிட்டு 4 பொது மத்தியஸ்தர்களையும் 16 கள மத்தியஸ்தர்களையும் நியமித்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) செவ்வாய்க்கிழமை (04 அறிவித்தது).

இலங்கையின் ரஞ்சன் மடுகல்லே பொது மத்தியஸ்தராகவும் குமார் தர்மசேன கள மத்தியஸ்தராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் கடந்த வருடம் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ரஞ்சன் மடுகல்லே பொது மத்தியஸ்தராக செயற்பட்டதுடன் குமார் தர்மசேன பதில் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டிருந்தார்.

ரஞ்சன் மடுகல்லே  175 டெஸ்ட் போட்டிகள், 304 சர்வதேச ஒருநாள் போட்டிகள்,  85 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் ஆகியவற்றில் பொது மத்தியஸ்தராக செயல்பட்டுள்ளார்.

ரஞ்சன் மடுகல்ல 207 டெஸ்ட் போட்டிகள்,  377 சர்வதேச ஒருநாள் போட்டிகள்,  128 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் ஆகியவற்றில் பொது மத்தியஸ்தராக செயல்பட்டுள்ளார். 

இம்முறை இருபது உலகக் கிண்ணத்தில் 6 போட்டிகளில் தர்மசேன கள மத்தியஸ்தராகவும் 10 போட்டிகளில் ரஞ்சன்  மடுகல்லே   பொது மத்திஸ்தராகவும் செயல்படவுள்ளனர்.

மத்தியஸ்தர்கள் விபரம்

பொது மத்தியஸ்தர்கள்: அண்ட்றூ பைக்ரொவ்ட், கிறிஸ்டோஃபர் ப்றோட், டேவிட் பூன், ரஞ்சன் மடுகல்லே.

கள மத்தியஸ்தர்கள்: ஏட்றியன் ஹோல்ட்ஸ்டொக், அலீம் தார், அஹ்சான் ராஸா, கிறிஸ்டோபர் ப்றவுண், கிறிஸ்டோஃபர் கஃபானி, ஜோயல் வில்சன், குமார் தர்மசேன, லெங்டன் ரூசியர், மராய்ஸ் இரேஸ்மஸ், மைக்கல் கோ, நிட்டின் மேனன், போல் ரைஃபல், போல் வில்சன், ரிச்சர்ட் இலிங்வேர்த், ரிச்சர்ட் கெட்ல்பரோ, ரொட்னி டக்கர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09