செலவுகளை குறைத்து வருமானத்தை அதிகரிப்பதே அடுத்த ஆண்டுக்கான இலக்கு - அரசாங்கம்

By T. Saranya

04 Oct, 2022 | 05:27 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

2023 நிதியாண்டுக்கான  ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக யோசனைக்கு அமைச்சரவைக் கூட்டத்தின் போதே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒவ்வொரு செலவுத் தலைப்புக்களுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள 2023 ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அமைச்சரவையால் ஆராயப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான மொத்த மீண்டெழும் செலவாக 4,634 பில்லியன் ரூபாய்களும், மொத்த மூலதனச் செலவாக 3,245 பில்லியன்களும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகவும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு செவ்வாய்க்கிழமை (4) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. 

இதன் போது இது குறித்து தெளிவுப்படுத்திய அமைச்சரவை பேச்சாளர பந்துல  குணவர்தன கூறுகையில்,

அரச வருமானம்  ஊற்றுக்களை வலுப்படுத்ததுல் முக்கியமாகின்றது. அதனை மையப்படுத்தி பல திட்டங்களை தற்போதைய அரசாங்கம்க முன்னெடுத்து வருகின்றது.

மொத்த செலவீனங்களாக  சுமார் 7,879 பில்லியன்  காணப்படுகின்றது. ஆனால் வருமானத்தை எடுத்துக்கொண்டால் 2,500 பில்லியனை நெருங்குவதே கடினமானதாகவே உள்ளது. 

அன்றாட செலவீனங்களை ஈடுச்செய்வதற்கும் போராட வேண்டிய நிலை உள்ளது. அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பணவு, ஓய்வூதியம், சமுர்தி போன்ற கொடுப்பணவுகள் உட்பட அரச கடன் என்பன முக்கியமாகின்றன.

இவற்றை ஈடு செய்ய மேலும் கடன்களை வாங்கியே இதுவரைக்காலமும் நாடு நிர்வகிக்கப்பட்டுள்ளது. இலங்கையை ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கடும் கடன் பெறாமல் இல்லை. எனவே தான் அனைத்து வரவு – செலவு திட்டங்களிலும் பற்றாக்குறையும் ஏற்படுகின்றன.

கொவிட் - 19  தொற்றின் பின்னல் இலங்கை பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே தான் சர்வதேச கடன்களை செலுத்த முடியாமல் போனது. 

ஆகவே இந்த நிலைமையில் தொடர்ந்தும் பயணிக்க இயலாது. நாட்டை வலுவாக கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.

நாட்டின் மொத்த வரி வருமானம் சுமார் 1268 பில்லியனாகும். அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு மாத்திரம் சுமார் 1,115 பில்லியன் செலவாகின்றது. 

விகிதாசாரத்தில் எடுத்துக்கொண்டால் மொத்த வரி வருவாயில் 86 வீதமாகும். எனவே தேசிய வருமானத்தை அதிகரிப்பதற்காக கட்டாயமாக செய்ய வேண்டிய  நான்கு விடயங்கள் உள்ளன.

அதாவது அரச வருமானத்தை அதிகரித்தல், அரச செலவீணங்களை குறைத்தல், நேரடி அந்நிய செலாவணி வருவாயை அதிகரித்தல் மற்றும் நாட்டிலுள்ள அந்நிய செலாவணி இருப்பு வெளியில் செல்லாமள் பாதுகாத்தல் என்பனவாகும். இவற்றை உரிய வகையில் கையாளும் வகையில்  கொள்கை வகுத்து செயற்பட வேண்டும்.

அரச வருவாயை அதிகரிக்க சுங்க சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளது. சுங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் 2006 ஆம் 01 ஆம் இலக்க அரசாங்க அரசிறையைப் பாதுகாத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தையும் திருத்துவதற்கு அமைச்சரவை பத்திரம் முன் வைக்கப்பட்டுள்ளது. 

சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 153 ஆவது உறுப்புரையின் ஏற்பாடுகளால் பொருட்களை அரசவுடமையாக்கல் மற்றும் அபராதம் விதித்தல் போன்றவற்றால் அரசுக்கு கிடைக்கின்ற வருமானம் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால் குறித்த உறுப்புரையை திருத்தம் செய்வதன் அவசியத்தை அராசாங்க கணக்குகள் பற்றிய பாராளுமன்ற குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல் இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் படிமுறையாக சுங்க நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை செய்தல் மற்றும் குறித்த விசாரணைகளைப் பூர்த்தி செய்வதற்கான கால வரையறையை சட்டரீதியாகக் குறித்தொதுக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. 

அதற்கமைய, பொருத்தமான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தி மேலும் சுங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் 2006 ஆம் 01 ஆம் இலக்க அரசாங்க அரசிறையைப் பாதுகாத்தல் சட்டத்தை திருத்தம் செய்வதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பணி இடை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல்...

2022-12-02 10:25:52
news-image

இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண...

2022-12-02 10:28:09
news-image

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு...

2022-12-02 10:32:00
news-image

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்...

2022-12-02 10:32:49
news-image

2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை...

2022-12-02 09:07:32
news-image

யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி...

2022-12-02 10:20:59
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-12-02 08:55:01
news-image

யாழ். வரணி குளத்தில் இருந்து சடலம்...

2022-12-02 09:03:04
news-image

நாட்டின் பல மாகாணங்களில் 75 மி.மீ....

2022-12-02 08:50:24
news-image

இலங்கை விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கு பிரிட்டன்...

2022-12-02 07:21:30
news-image

யாழில் டிக்டொக்கால் வந்தவினை ! மோட்டார்...

2022-12-02 06:09:05
news-image

நாடு முன்னேற்றமடைய கல்விக்கொள்கை நிலையானதாக அமைக்கப்பட்ட...

2022-12-01 19:38:14