(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)
சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தினால் நாட்டின் பல்வேறு தொழிற்துறைகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ஆகவே அந்த உடன்படிக்கையின் உள்ளடக்கத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற நிதி அமைச்சின் வரிச் சலுகைகள் மற்றும் சில வரிச் சட்டங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சில நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கிக்கொண்டு, முதியோர் தினத்தன்று வங்கிகளில் முதியோர்களின் வங்கிக் கணக்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட 15 வீத வட்டியை முழுமையாக இல்லாமல் செய்துள்ளனர். இது முதியோர் தினத்தில் அவர்களுக்கு வழங்கிய பரிசை போன்றே இது உள்ளது.
அவர்களின் மருந்துகளை வழங்குவதற்குக்கூட முடியாத நிலையில் இருக்கின்றனர். கம்பனிகளுக்கு வரிச்சலுகைகளை வழங்கிக்கொண்டு தங்களின் சொந்தப் பணத்தை வங்கிகளில் வைத்திருக்கும் முதியோருக்கு இவ்வாறான நிலைமையை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த காலங்களில் வங்கிகளின் வட்டி வீதத்தில் மாற்றங்களை மேற்கொண்டமையினால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறிய மற்றும் மத்திய தொழில்துறையினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அநீதியானது.
இதேவேளை இங்கே ஊழல் மோசடிகளை நிறுத்தினாலே முதலீட்டாளர்கள் இங்கு வருவார்கள். முதலீட்டாளர்களுக்கு இங்கே அரசாங்கம் எப்படியிருந்தாலும் பிரச்சினையில்லை. அவர்களுக்கு முதலில் மோசடிகள் இல்லாத அரசாங்கமாக இருப்பதே முக்கியமானது.
இதேவேளை சீனாவுடன் செய்யவுள்ள வர்த்தக உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் என்ன என்று அறிந்துகொள்ள வேண்டும். அதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். அதனை செய்யாது கையெழுத்திட்டால் இந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களால் பல்வேறு துறைகளுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற சந்தேகங்கள் உள்ளன. இதனால் அதில் உள்ளடக்கம் தொடர்பில் வெளிப்படுத்த வேண்டும் என்பதுடன் அதன் வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM