எமது பாராளுமன்ற உரிமை மறுக்கப்படுகிறது - கவலையில் தயாசிறி

Published By: Digital Desk 5

04 Oct, 2022 | 04:24 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர், எம்.வசீம்)

அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 35 உறுப்பினர்களில் அறிவார்ந்த பெரும்பாலானோர் கோப் குழுவுக்கு நியமிக்கப்படவில்லை.

குறுகிய அரசியல் நோக்கத்துக்கான எமது பாராளுமன்ற உரிமை மறுக்கப்படுகிறது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது கோப் குழுவுக்கு சுயாதீன தரப்பினரின் உறுப்பினர்கள் நியமிக்கப்படாமை குறித்து விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தில் இருந்து விலகி பாரர்ளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் பெரும்பாலான தரப்பினர்கள் பாராளுமன்ற தெரிவு குழுக்களுக்கு நியமிக்கப்படவில்லை. அரசாங்கத்தின் குறைப்பாடுகளை பகிரங்கப்படுத்துவதால் எமது பாராளுமன்ற உரிமை மறுக்கப்படுகிறது.

சுயாதீன உறுப்பினர்களான சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, திஸ்ஸ விதாரன,ரத்ன சேகர உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் கடந்த கோப் குழுவின் உறுப்பினர்களாக அங்கம் வகித்தார்கள்.

சுயாதீன தரப்பினர்களின் அறிவார்ந்த பெரும்பாலானோர் கோப் மற்றும் கோபா குழுக்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த 18 வருடகாலமாக கோப் மற்றும் கோபா குழுக்களின் உறுப்பினராக பதவி வகித்துள்ளேன்.எந்நிலையிலும் ஊழல் மோசடியாளர்களுக்கு துணைபோகவில்லை. அரச நிறுவனங்களின் பல மோசடிகளை அறிக்கையிட பொறுப்புடன் செயற்பட்டுள்ளேன்.

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 35 உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கோப் குழுவுக்கு நியமிக்கப்படவில்லை.

எமது அரசியல் மற்றும் பாராளுமன்ற உரிமை திட்டமிட்ட வகையில் மறுக்கப்படுகிறது.இவ்விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15