இராணுவப் புரட்சி சர்ச்சை :  தினேஷிடம் விசாரணை நடத்துங்கள் 

Published By: MD.Lucias

21 Nov, 2016 | 03:22 PM
image

(ரொபட் அன்டனி)

இராணுவப் புரட்சி ஏற்படுவதற்கான  வாய்ப்புள்ளதாக   கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்  தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளமை தொடர்பில்  அவரிடம்  விசாரணை நடத்தப்படவேண்டுமென  அரசாங்கத்திடமும்   முப்படைகளின் தளபதியான  ஜனாதிபதியிடமும் கோரிக்கை விடுக்கின்றோம் என்று   சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

ஜனநாயக ரீதியில்  ஆட்சியை   கைப்பற்ற முடியாது என்பதை தெரிந்துகொண்டுள்ளதாலேயே   கூட்டு எதிரணியினர்  இவ்வாறு  இராணுவப் புரட்சிக் கதையை முன்வைக்கின்றனர்.  இது வெறும் கனவுமட்டுமேயாகும் எனவும்   ராஜித சேனாரட்ன சுட்டிக்காட்டினார். 

இலங்கையில்   இராணுவப் புரட்சி ஏற்படும்   அபாயம் உள்ளதாக  கூட்டு எதிரணியின் தலைவர்  கடந்தவாரம்  பாராளுமன்றத்தில்   தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில் வினவியபோதே  அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித  சேனாரட்ன மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். 

அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் 

கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய  கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன  நாட்டில் இராணுவ புரட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.  

ஆனால் அவ்வாறு  எவ்விதமான  இராணுவ புரட்சியும்  நாட்டில் ஏற்படாது என்பதனை பொறுப்புடன் தெரிவிக்கின்றோம்.  கூட்டு எதிரணியை சேர்ந்த தினேஷ் குணவர்த்தனவுக்கு ஜனநாயக ரீதியில் ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பது நன்றாக தெரிந்துவிட்டது. எனவே தற்போது  இராணுவ புரட்சி என்ற ஒரு கதையை கொண்டுவந்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். 

ஆனால் எமது நாட்டில் அவ்வாறு  ஒருபோதும்  இராணுவ புரட்சி ஏற்படாது.   நான்  நேற்று முன்தினம்  இராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தினேன். இதன்போது  அவ்வாறான  பேச்சுக்கே  இடமில்லை என்று இராணுவ உயர் அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.  

இவ்வாறான  சூழலில்  கூட்டு எதிரணியினர் குழப்பத்தை  ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.   இந்த இடத்தில் நாங்கள்   அரசாங்கத்திடமும்  முப்படைகளின் தளபதியான   ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவிடம்   ஒரு கோரிக்கையை விடுக்கின்றோம். 

அதாவது  இராணுவ புரட்சி  தொடர்பான    கதையை வெ ளியிட்ட  கூட்டு எதிரணியின்  தினேஷ் குணவர்த்தன எம்.பி.  அழைத்து விசாரணை நடத்தவேண்டும் என்று நாங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.   அதாவது தினேஷ் குணவர்த்தன ஏன் இவ்வாறான  ஒரு கூற்றை வெ ளியிட்டார்   அதற்கான காரணம் என்ன? போன்ற விடயங்கள் குறித்து அவரிடம்  விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13