சத்யராஜ் - வசந்த் ரவி இணையும் 'வெப்பன்'

By Digital Desk 5

04 Oct, 2022 | 10:53 AM
image

'புரட்சித் தமிழன்' சத்யராஜ், நடிகர் வசந்த் ரவி கதையின் நாயகர்களாக நடிக்கும் புதிய படத்திற்கு 'வெப்பன்' என பெயரிடப்பட்டிருப்பதாக பட குழுவின தெரிவித்திருக்கிறார்கள்.

'சவாரி', 'வெள்ளை ராஜா' ஆகிய படைப்புகளை இயக்கிய இயக்குநர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'வெப்பன்'. இதில் 'புரட்சித் தமிழன்' சத்யராஜும், 'தரமணி', 'ராக்கி' பட புகழ் நடிகர் வசந்த் ரவியும் கதையின் நாயகர்களாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' சஸ்பென்ஸ் திரில்லர் ஜேனரில் 'வெப்பன்' படத்தின் திரைக்கதை தயாராகி இருக்கிறது. இதுவரை குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் சத்யராஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் வசந்த் ரவியும் நடிக்கிறார். சென்னை மற்றும் மலை வாசஸ்தலம் ஒன்றில் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது'' என்றார்.

சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி இருவரும் முதன் முதலாக இணைந்து நடிப்பதால், 'வெப்பன்: படத்திற்கு அறிவிப்பு நிலையிலேயே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்