இன்றைய திகதியில் இரண்டு வயது முதல் நான்கு வயது வரை உள்ள பிள்ளைகள் இரவு நேர உறக்கத்தின் போது தங்களது பற்களை கடித்துக் கொள்வதை காண்கிறோம். இதனால் பெற்றோர்கள் தவிப்புடன் அசௌகரியமான உணர்வுக்கு ஆளாகிறார்கள். இந்நிலையில் குழந்தைகளை இதிலிருந்து தற்காப்பதற்கான வழிமுறைகள் குறித்து மருத்துவர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.
முதலில் இதனை மருத்துவ மொழியில் டீத் கிரைண்டிங் என்றும், புரூக்ஷிசம் ( Bruxism) என்றும் குறிப்பிடுவார்கள். சில குழந்தைகளுக்கு அந்த வயதில் ஏற்படும் மன அழுத்தம் காரணமாகவே அவர்கள் உறக்கத்தின் போது பற்களை நறநறவன கடித்துக் கொள்கிறார்கள். உடனே எம்மில் பலரும் இரண்டு வயது குழந்தைக்கு மன அழுத்தமா? என ஆச்சரியமாக வினா எழுப்புவர்.
இன்றைய சூழலில் எம்முடைய இல்லங்களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆளுக்கொரு கைப்பேசிகளை தங்களுடைய கைகளில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆறு மாத குழந்தைகள் முதல் இரண்டு வயது, நான்கு வயது குழந்தைகள் வரை பிடிவாதம் பிடிக்காமல் இருப்பதற்காகவும், அழுகையை தொடராமல் இருப்பதற்காகவும், அவர்களுக்கு உணவு ஊட்டுவதற்காகவும், அவர்களுடைய கைகளில் விரும்புகிறார்களோ... விரும்பவில்லையோ... செல்போனை பேட் லேப்டாப் போன்றவற்றை பெற்றோர்கள் வழங்குகிறார்கள் அதில் ஒளிரும் காட்சிகளை அந்த குழந்தை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு அதில் சிலவற்றை தன் எண்ணத் தொகுப்புக்களுக்குள் பதிவு செய்து கொள்கிறது.
வேறு சில வீடுகளில் குழந்தைகள் தொலைக்காட்சியை தொடர்ச்சியாக காண்கிறார்கள். அவர்கள் பார்க்கும் விடயங்கள் குறித்து அவர்களுடைய எதிர்வினையை செய்வதற்கான வழிமுறைகளை வெளிப்படுத்த தெரியாததால், இரவில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
குறிப்பாக இரவு உறங்குவதற்கு முன் அவர்கள் காணும் காட்சிகள், அவர்களை இது போன்ற செயலுக்கு தூண்டுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனால் மருத்துவ நிபுணர்கள் குழந்தை உறங்குவதற்கு இரண்டு மணி தியாலங்களுக்கு முன்னால் இலத்திரனியல் சாதனங்களின் பாவனைகளை முற்றாக தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.
இதைத் தவிர்த்து வேறு சில பிள்ளைகளுக்கு அவர்களின் வாயில் புதிதாக பற்கள் முளைத்தாலும் இது போன்ற செயலில் ஈடுபடுவார்கள்.
வேறு சில பிள்ளைகளுக்கு அவர்களுடைய வயிற்றின் குடல் பகுதியில் இருக்கும் Intestinal Worms எனப்படும் பூச்சிகளின் காரணமாகவும் அவர்கள் பற்களை கடிப்பார்கள். வேறு சிலர் உறக்கத்தின் போது வாய் வழியாக சுவாசிப்பார்கள். இவர்களும் பற்களை கடிக்கக்கூடும்.
நான்கு வயதிற்குப் பிறகும் இத்தகைய பாதிப்பு குறைவில்லை என்றால், குழந்தைகளுக்கான பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் குழந்தைகள் பற்களை கடிப்பதற்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கு முதன்மையான நிவாரணமாக மவுத் கார்ட் எனப்படும் உறக்கத்தின் போது இரவு நேரத்தில் வாய்க்குள் பொருத்திக் கொள்ளும் சாதனம் ஒன்றை வழங்குவார்கள். இதனை பயன்படுத்தி பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம்.
டொக்டர் சௌந்தர்யா
தொகுப்பு அனுஷா.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM