பாராளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கு புதிய தொலைக்காட்சி அலைவரிசையொன்றை இன்னும் மூன்று மாதங்களுக்குள் நிறுவுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய தொலைக்காட்சி அலைவரிசையொன்றை பெற்றுக்கொடுக்க நிதியமைச்சு எதிர்பார்த்துள்ளதாக இதன்போது சபாநாயகர் தெரிவித்தார்.

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கை நேரடி ஒளிபரப்பு செனல் ஐ தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட போதிலும் இலங்கை - சிம்பாப்வே கிரிக்கெட் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமம் செனல் ஐ தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டிருந்தமையால்  நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தீர்மானத்துக்கு பிரதமரும் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.