குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு : மற்றொருவர் மாயம் - மட்டக்களப்பில் சம்பவம்

Published By: Digital Desk 5

03 Oct, 2022 | 04:49 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

மட்டக்களப்பு, உன்னிச்சை குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காணாமல் போயுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (02) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள உன்னிச்சை குளத்தில் நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் 17 வயதுடைய கன்னங்குடா, வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.

இதன்போது குறித்த சிறுவனை மீட்பதற்கு முயற்சித்த மற்றொரு நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.   35 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

 காணமற்போன மற்றொருவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பில் ஆயித்தியமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ...

2025-03-18 12:43:13
news-image

02 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞன்...

2025-03-18 12:32:04
news-image

மியன்மார் சைபர் கிரைம் மோசடி முகாம்களில்...

2025-03-18 13:08:50
news-image

மீண்டும் அரசியலுக்கு பிரவேசிக்கவிருப்பதாக லொகான் ரத்வத்தை...

2025-03-18 12:28:36
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

2025-03-18 12:05:27
news-image

யாழ். குருநகரைச் சேர்ந்த காணாமல்போன மீனவர்களை...

2025-03-18 12:19:43
news-image

கடையின் சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு...

2025-03-18 12:45:53
news-image

மீன்பிடி அமைச்சால் கொண்டுவரவிருக்கும் கடற்றொழில் சட்டம்...

2025-03-18 11:57:48
news-image

நிலாவெளியில் வாகன விபத்து ; முச்சக்கரவண்டி...

2025-03-18 11:57:09
news-image

120 மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரட்டுகள்...

2025-03-18 11:43:21
news-image

பாராளுமன்றம் பற்றி எழுதப்பட்ட இரண்டு நூல்கள்...

2025-03-18 11:56:33
news-image

“கணேமுல்ல சஞ்சீவ“ படுகொலை ; கைது...

2025-03-18 11:24:42