களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கடவத்தை - கெரவலபிடிய அதிவேக வீதிப் பகுதிக்கு நீர் கொண்டு செல்லும் குழாய் பொருத்தும் செயற்பாடுகளுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்பிரகாரம், வாத்துவ, பொதுபிடிய, வஸ்கடுவ, களுத்துறை - வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பெந்தோட்டை, பயாகல, மக்கொன, பேருவளை, களுவாமோதரை, மொரகல்ல, தர்கா நகர், அளுத்கம, பேம்புவல மற்றும் பிலமினாவத்தை ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

எனவே நீர் வெட்டின் பின்னர் சிரமங்களுக்கு உள்ளாகாமல் முன்தினமே நீரை சேமித்து வைக்கும் படியும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.