சாய்ந்தமருது கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஆசிரியை என அடையாளம் : கொலையா ? தற்கொலையா ? என்ற கோணத்தில் விசாரணை

By Digital Desk 5

03 Oct, 2022 | 04:25 PM
image

சாய்ந்தமருது   கடற்கரை பிரதேசத்தில்   மீட்கப்பட்ட பெண்  ஒருவரின் சடலம்   தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பினை கோரியிருந்த நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது  பொலிஸ்  பிரிவில்  திங்கட்கிழமை (03)  குறித்த  சடலம் கடலில் மிதந்த கடற்படையினரின் உதவியுடன் சாய்ந்தமருது பொலிஸார்  மீட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சடலமானது   இனங்காணப்படாதிருந்த நிலையில் இன்று காலை பொதுமக்களின் உதவியினை கோரி இருந்தனர்.அத்துடன் ஊடகங்கள் பலவற்றிலும் செய்திகள் பிரசுரமாகி இருந்தன.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலம் குறித்து  ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியதுடன் அம்பாறை மாவட்டம் காரைதீவு   பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஆறுமுகம் வனிதா   என்ற ஒரு பிள்ளையின் தாயார் என  அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஓர் ஆசிரியர் எனவும் இம்மரணம், தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் 

மேலதிக விசாரணைகளை  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 9...

2022-12-09 14:23:17
news-image

நுகேகொடையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த...

2022-12-09 13:39:36
news-image

உடுகம பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டுக் கொலை!

2022-12-09 13:40:31
news-image

இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிப்பு -...

2022-12-09 13:19:21
news-image

கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கும்...

2022-12-09 13:24:01
news-image

வவுனியாவை சேர்ந்தவர் கொழும்பில் 3 ஆவது...

2022-12-09 13:33:48
news-image

ரி - 56 ரக துப்பாக்கியின்...

2022-12-09 13:22:54
news-image

வடக்கு மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை...

2022-12-09 12:58:15
news-image

சார்ஜன்டின் மனைவியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்...

2022-12-09 12:24:27
news-image

காற்று மாசடைவது குறித்து யாழ் மக்களுக்கு...

2022-12-09 12:07:04
news-image

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள்...

2022-12-09 11:56:50
news-image

விகாரையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவன் மர்மமான முறையில்...

2022-12-09 11:55:41