கனேடிய உயர்ஸ்தானிகரும் பிரான்ஸ் தூதுவரும் ஜனாதிபதியை சந்தித்தனர்

By T. Saranya

03 Oct, 2022 | 04:02 PM
image

இலங்கையில் பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் கனேடிய உயர்ஸ்தானிகரும் பிரான்ஸ் தூதுவரும்  ஜனாதிபதியை சந்தித்தனர்.

இலங்கையில் தமது  பதவிக் காலம் முடிந்து நாடு திரும்பவுள்ள  கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் (David McKinnon) மற்றும் பிரான்ஸ் தூதுவர் எரிக் லவே(ர்)து (Eric Lavertu) ஆகியோர் இன்று (03) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் தனித்தனியாக சந்தித்தனர்.

இச்சந்திப்பின்போது தமது பதவிக் காலம் முடிவடைந்துள்ளமை  தொடர்பில் அவர்கள் ஜனாதிபதிக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் பிரான்ஸ் தூதுவர் ஆகியோருடன் நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

டேவிட் மெக்கினொன் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல்  இலங்கைக்கான கனேடிய தூதுவராகவும் எரிக் லவே(ர்)து  2018 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் திகதி முதல் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர கடலுக்கடியிலான இணைய கேபிள்...

2022-12-09 15:05:51
news-image

வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 9...

2022-12-09 14:23:17
news-image

நுகேகொடையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த...

2022-12-09 13:39:36
news-image

உடுகம பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டுக் கொலை!

2022-12-09 13:40:31
news-image

இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிப்பு -...

2022-12-09 13:19:21
news-image

கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கும்...

2022-12-09 14:34:19
news-image

வவுனியாவை சேர்ந்தவர் கொழும்பில் 3 ஆவது...

2022-12-09 13:33:48
news-image

ரி - 56 ரக துப்பாக்கியின்...

2022-12-09 13:22:54
news-image

வடக்கு மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை...

2022-12-09 12:58:15
news-image

சார்ஜன்டின் மனைவியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்...

2022-12-09 12:24:27
news-image

காற்று மாசடைவது குறித்து யாழ் மக்களுக்கு...

2022-12-09 12:07:04
news-image

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள்...

2022-12-09 11:56:50