புட்டினுக்கு பாப்பரசர் விடுத்துள்ள வேண்டுகோள்

Published By: Digital Desk 3

03 Oct, 2022 | 02:40 PM
image

வன்முறை மற்றும் மரண சுழலை நிறுத்தும்படி ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 221-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

இந்த போரில் உக்ரேனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.

இதனிடையே, போரில் கைப்பற்றிய உக்ரேனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இந்த பகுதி ஒட்டுமொத்த உக்ரேனின் 15 சதவிகிதம் ஆகும். 

சர்வதேச நாடுகளால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என அறிவிக்கப்பட்டுள்ள இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரேன் - ரஷ்யா இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், வன்முறை சுழலை நிறுத்தும்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு கிறிஸ்தவ மதத்தின் கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இத்தாலியின் ரோம் நகரில் புனித பீட்டர் சதுர்க்கத்தில் மத வழிபாட்டிற்காக கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய போப் பிரான்சிஸ், உக்ரைனில் நிகழும் வன்முறை மற்றும் மரண சுழலை நிறுத்தும்படி நிறுத்தும்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கேட்டுக்கொள்கிறேன். 

அணு ஆயுத யுத்த ஆபத்தை அபத்தமானது என அவர் கூறினார். தீவிர அமைதி ஒப்பந்தத்திற்கு திறந்த நிலையில் உக்ரேன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி முன் வர வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52