(என்.வீ.ஏ.)
சில்ஹெட்டில் நடைபெற்றுவரும் மகளிர் இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் 4ஆவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தை டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 11 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது.
இரண்டாவது தடவையாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அணித் தலைவி சமரி அத்தப்பத்து துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிவருவது அணிக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக அமைகிறது.
ஹர்ஷிதா சமரவிக்ரம (37), நிலக்ஷி டி சில்வா (19), அனுஷ்கா சஞ்சீவனி (17) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
ஐக்கிய அரபு இராச்சிய பந்துவீச்சில் வைஷ்ணவி மஹேஷ் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மஹிகா கோர் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சமய்ரா தார்ணிதர்கா 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
110 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 3 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது சீரற்ற காலநிலை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது.
சுமார் ஒன்றரை மணித்தியாலத்தின் பின்னர் ஆட்டம் தொடர்ந்தபோது ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 11 ஓவர்களில் 66 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், ஐக்கிய அரபு இராச்சியம் 11 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 54 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
இலங்கை பந்துவீச்சில் காவிஷா டில்ஹாரி, இனோக்கா ரணவீர ஆகிய இருவரும் ஒரே மாதிரியாக 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM