சட்டக்கல்லூரியில் தமிழ், சிங்கள மாணவர்களின் அடிப்படை உரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது - நீதி அமைச்சர் விஜயதாஸ

Published By: Digital Desk 5

03 Oct, 2022 | 12:00 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

சட்டக்கல்லூரி மாணவர்கள் 2023ஆம் ஆண்டுக்கு பிறகு ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்று வெளியிட்டுள்ள வர்த்தமானியை மீள்பரிசீலனை செய்ய ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

தமிழ்,சிங்கள மாணவர்களின் அடிப்படை உரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். 

தமிழ்,சிங்களம் அரசகரும மொழியாக உள்ள நிலையில் சட்ட கல்லூரியில் ஆங்கில மொழிக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கியுள்ளமை அரசியலமைப்புக்கு முரணானதாகும் என பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன,வாசுதேவ நாணயக்கார ஆகியோர் குறிப்பிட்டனர்.

சபாநாயகர் தலைமையில் திங்கட்கிழமை (03) பாராளுமன்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது எதிர்தரப்பின் உறுப்பினர் புத்திக பத்திரன முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது

சிங்களம் மற்றும் தமிழ் மாணவர்கள் தங்களின் தாய்மொழியில் சட்ட பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய உரிமையுண்டு,வெளி நாட்டில் ஆங்கில மொழியில் சட்ட படிப்பை பூர்த்தி செய்த ஒருவர் சட்டத் தொழிற்துறையில் ஈடுப்படுவதற்கும்,சிங்களம் அல்லது தமிழ் மொழியில் சட்ட தொழிற்துறையில் ஈடுப்படுபவர்களுக்கும் தொழிற்துறை ரீதியில் ஒருசில சிக்கல் காணப்படுகிறது.

சட்ட கல்லூரி பரீட்சையை ஆங்கில மொழியில் மாத்திரம் தோற்றும் வகையிலான வர்த்தமானி 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இத்தீர்மானத்திற்கு சமூக மட்டத்தில் எதிர்ப்பு தோற்றம் பெற்றதை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு அத்தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டு,

மாணவர்கள் தமது தாய்மொழியில் பரீட்சைக்கு தோற்ற அனுமதி வழங்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு பின்னர் சட்டக்கல்லூரியின் முதலாம்,இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பரீட்சைகளுக்கு ஆங்கில மொழியில் மாத்திரம் தோற்ற வேண்டும் என விசேட வர்த்தமானி கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இத்தீர்மானம் தொடர்பில் மாணவர்கள் முறைப்பாடளித்துள்ளார்கள்.

வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதம நீதியரசரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியை  மீள்பரிசீலனை செய்ய ஆலோசனை கோரப்பட்டுள்ளது.தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களின் அடிப்படை உரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய முன்னாள் அரச கரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,தமிழ் மற்றும் சிங்கள மொழி இந்த நாட்டின் அரச கரும மொழிகளாகும்,ஆங்கில மொழி தொடர்பு மொழியாகும்.

இந்நாட்டு மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் சட்ட கல்லூரி பரீட்சையை தோற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளமை அரசியலமைப்புக்கு முரணானதாகும்.உயர் வர்க்கத்தின் தேவைக்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன் போது எழுந்து உரையாற்றிய முன்னாள் உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன ஒரு பிள்ளை தமது ஆரம்ப கல்வியை தமது தாய் மொழியில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற யுனெஸ்கோ நிறுவனத்தின் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் தமது தாய்மொழியில் பட்டபடிப்பை தொடர உரிமையுண்டு,அதற்கு தடையேற்படுமாயின் அது அடிப்படை உரிமை மீறலாகும்.இவ்விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயகாரவின் கூற்றுக்கு உடன்படுகிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04