துடுப்பாட்டத்தில் மாலன், பந்துவீச்சில் வோக்ஸ் அசத்தல் ; பாகிஸ்தானுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து

By Digital Desk 5

03 Oct, 2022 | 09:45 AM
image

(என்.வீ.ஏ.)

பாகிஸ்தானுக்கு எதிராக லாகூர் கடாபி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிமை (02) இரவு நடைபெற்ற 7ஆவதும் கடைசியுமான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 67 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து தொடரை 4 - 3 என்ற ஆட்டக் கணக்கில்  கைப்பற்றியது. 

துடுப்பாட்டத்தில் டேவிட் மாலனும் பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸும் பிரகாசித்ததன் பலனாக இங்கிலாந்து கடைசிப் போட்டியில் இலகுவாக வெற்றிபெற்றது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அண்மைக்காலத்தில் மிகவும் விறுவிறுப்பை தோற்றுவித்ததாக அமைந்த இந்தத் தொடரில் 2 அணிகளும் தலா 3 வெற்றிகளுடன் தீர்மானம் மிக்க கடைசிப் போட்டியை எதிர்கொண்டன.

இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 210 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் சவாலை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

Babar Azam anchored Pakistan's innings, Pakistan vs England, 6th T20I, Lahore, September 30, 2022

அணித் தலைவர் பாபர் அஸாம் (4), இந்தத் தொடரில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிவந்த மொஹமத் ரிஸ்வான் (1) ஆகிய இருவரும் முதல் 2 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்ததால் பாகிஸ்தான் பெரும் தடுமாற்றம் அடைந்தது.

எவ்வாறாயினும் ஷான் மசூத் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 19 ஓட்டங்களைப் பெற்ற இப்திகார் அஹ்மத்துடன் 3ஆவது விக்கெட்டில் 28 ஓட்டங்களையும் 4ஆவது விக்கெட்டில் குஷ்தில் ஷாவுடன் மேலும் 53 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை மோசமான நிலையில் இருந்து மீட்டு ஓரளவு நல்ல நிலையில் இட்டார்.  

குஷ்தில் ஷா 27 ஓட்டங்களைப் பெற்றார்.

Reece Topley celebrates his dismissal of Mohammad Rizwan, Pakistan vs England, 7th T20I, Lahore, October 2, 2022

மறுபக்கத்தில் தனி ஒருவராகப் போராடிய ஷான் மசூத் 56 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது 7ஆவதாக ஆட்டமிழக்க பாகிஸ்தானின் அற்சொற்ப நம்பிக்கையும் அற்றுப் போனது. பின்வரிசையில் எவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.

இங்கிலாந்து பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் டேவிட் வில்லி 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களைக் குவித்தது.

அலெக்ஸ் ஹேல்ஸ் (18), பில் சோல்ட் (20) ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து  5ஆவது ஓவரில்   ஒரே மொத்த எண்ணிக்கையில்  ஆட்டமிழந்தனர்.

The England players pose with the series trophy, Pakistan vs England, 7th T20I, Lahore, October 2, 2022

ஆனால், டேவிட் மாலன் அதிரடியாக துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்றதுடன் பென் டக்கெட், ஹெரி ப்றூக் ஆகியோருடன் சிறப்பான இரண்டு இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி இங்கிலாந்தை பலமான நிலையில் இட்டார்.

19 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்ற பென் டக்கெட்டுடன் 3ஆவது விக்கெட்டில்  62 ஓட்டங்களைப் பகிர்ந்த டேவிட் மாலன், பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் ஹெரி ப்றூக்குடன் பெறுமதிமிக்க 108 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

47 பந்துகளை எதிர்கொண்ட டேவிட் மாலன் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 73 ஓட்டங்களுடனும் ஹெரி ப்றூக் 29 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 1 பவுண்டறி அடங்கலாக 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

டெவிட் மாலன் ஆட்டநாயகன் விருதை வென்றதுடன் ஹெரி ப்றூக் தொடர்நாயகன் ஆனார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிசெல் மார்ஷ் 3 மாதம் போட்டிகளில்...

2022-12-02 11:49:47
news-image

கொஸ்டா ரிக்காவை வீழ்த்தியும் 2ஆம் சுற்று...

2022-12-02 10:10:53
news-image

ஸ்பெய்னை வீழ்த்திய ஜப்பான் உலகக் கிண்ணத்தில்...

2022-12-02 09:44:31
news-image

வனிந்து ஹசரங்கவுக்கு அபராதம், எச்சரிக்கை

2022-12-01 23:24:51
news-image

மொரோக்கோ, குரோஷியா 2ஆம் சுற்றுக்குத் தகுதி:,...

2022-12-01 22:40:49
news-image

பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து புதிய...

2022-12-01 18:27:02
news-image

மேற்கிந்திய அணியுடனான டெஸ்ட்டில்  லபுஷேன், ஸ்மித்...

2022-12-01 17:31:02
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் சி குழுவில்...

2022-12-01 18:58:36
news-image

கிரிக்கெட்டை விட பெண்களை சந்திப்பதிலேயே சாமிகவிற்கு...

2022-12-01 16:30:25
news-image

இளையோர் லீக் கிரிக்கெட் : கொழும்பு...

2022-12-01 19:39:02
news-image

மெக்சிகோவின் 2ஆம் சுற்று வாய்ப்பு கைக்கு...

2022-12-01 11:34:07
news-image

11 வீரர்களை களமிறக்க இங்கிலாந்து தயார்,...

2022-12-01 09:44:27