குருநாகல் வர்த்தகர் கொலை : சந்தேக நபர் கைது

Published By: Vishnu

02 Oct, 2022 | 09:57 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

குருநாகல் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 28 ஆம் திகதி குருநாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருநாகல் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டு அவரிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சீ.சீ.டி.வி கட்சிகளை அடிப்படையாக கொண்டு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்று குருநாகல் புத்தளம் வீதியில் அமைந்துள்ள வாகனங்கள் பழுது பார்க்கும் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய பொதுஹெர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவர்

இதன்போது கொலைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் அங்கிருந்து கொள்ளையிடப்பட்டு கொண்டு செல்லப்பட்ட நகைகள் சந்தேக நபர் வேலை செய்யும் வேலைத்தளத்தில் உள்ள குளியலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபர் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04
news-image

4 உணவக உரிமையாளர்களுக்கும் எதிராக ரூபா...

2025-03-26 17:35:26
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கோடாவுடன்...

2025-03-26 17:28:12
news-image

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் -...

2025-03-26 17:15:00
news-image

அஸ்வெசும பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதில்...

2025-03-26 17:25:49
news-image

பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார...

2025-03-26 17:06:23