100 புலமைப்பரிசில்களை வழங்கும் திட்டம் - இந்திய உயர்ஸ்தானிகர்

Published By: Digital Desk 5

02 Oct, 2022 | 07:45 PM
image

மட்டக்களப்பில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, 100 புலமைப்பரிசில்களை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, புலமைப்பரிசில்கள், 'இந்தியாவில் பயிலுங்கள்' நிகழ்ச்சித்திட்டம் மற்றும் தேசிய அறிவுசார் வலையமைப்பு உள்ளிட்ட பல்வேறு செயற்திட்டங்கள் ஊடாக உயர்கல்வித்துறையில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் உயர்ஸ்தானிகர் இதன்போது அழைப்புவிடுத்துள்ளார்.

இதுஇவ்வாறிருக்க மறுபுறம் கிழக்கில் சுகாதார உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்குப் பங்களிப்புச்செய்யக்கூடியவகையில் இந்திய நன்கொடை உதவித்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை அலகினை நிர்மாணிக்கும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கிழக்கு விஜயத்தின்போது உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மீளாய்வுசெய்துள்ளார்.

மேலும் இவ்விஜயத்தின்போது மட்டக்களப்பிலுள்ள இராமகிருஷ்ண மிஷன், காத்தான்குடி பதுரியா ஜும்ஆ மசூதி, காத்தான்குடி முஹைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல், திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆகிய மத வணக்கஸ்தலங்களுக்குச்சென்று மத வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30