காலவரையறைக்குள் தகவல்கள் வழங்காது விட்டால் கடும் நடவடிக்கை

Published By: Vishnu

02 Oct, 2022 | 03:39 PM
image

உரிய காலவரையறையினுள் பகிரங்க அதிகாரசபை தகவல்களை வழங்குவதை புறக்கணித்தால் அல்லது ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு கீழ்ப்படியவில்லை என்றால் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

உலகளாவிய தகவல் அணுகலுக்கான சர்வதேசதினத்தை முன்னிட்டு, இலங்கையின் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு யாழ்ப்பாண மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பத்திரிகைக்கழகங்கள் மற்றும் வடமாகாண கல்வியாளர்களுடன் இணைந்து, தொடர்கலந்துரையாடலை நடத்தியது. இதன்போதே தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆணைக்குழு மற்றும் மாவட்டசெயலாளர் க.மகேசன் தலைமையில் வடமாகாண பிரதேச செயலகங்கள், அரச அதிகாரிகள் மற்றும் சமூகத்தினருடன் இணைந்து கடந்த ஐந்து வருடங்களாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்துவதில் ஏற்பட்டவெற்றிகள் மற்றும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. 

குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற சமூகப்பிரதிநிதிகள், தகவல் கோரிக்கையை செயல்படுத்தும் வகையில் பகிரங்க அதிகாரசபை இன்னும் திறமையாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினர். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தும் போது, சிலபகிரங்க அதிகாரசபைகளால் ஊக்கமளிக்கப்படாத நிகழ்வுகளையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

உரிய காலவரையறையினுள் பகிரங்க அதிகாரசபை தகவல்களை வழங்குவதன் முக்கியத்துவத்தை ஆணைக்குழு வலியுறுத்துகிறது. மேலும் காலவரையறையினை புறக்கணித்தால் அல்லது ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு கீழ்ப்படியவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்கூறியது. 

தகவல் அறியும் உரிமைச் செய்தியை கிராமப் புறங்களுக்கு திறம்பட எடுத்துச் செல்வதற்காக மாகாண அலுவலகங்களை நிறுவுமாறு பலர் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து, வட மாகாண பத்திரிக்கை ஆசிரியர்கள், இதழாசிரியர் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் விரிவானகலந்துரையாடல் இடம்பெற்றதுடன், சில அரச அலுவலகங்களில் முறையாகச் செயற்படும் தகவல் உத்தியோகத்தர்கள் இல்லை  என ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர். 

பகிரங்க அதிகாரசபைகள் தகவல் கோரிக்கையை கவனிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை அவர்கள் அவதானிப்பதாகவும் அது தொடர்பில் உடனடியாக இந்த விவகாரங்கள் குறித்து ஆராய ஆணைக்குழுவினால் நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டிக் கொண்டனர். 

அதிக எண்ணிக்கையிலான வழக்குகளில் தகவல்களை வெளியிடும் ஆணைக்குழுவின் பணியைப் பாராட்டினாலும், பகிரங்க அதிகார சபையின் தகவல கோரிக்கையை புறக்கணிக்கும் போக்குத் தொடர்ந்தால், தகவல் அறியும் சட்டம் குடிமக்களுக்கு சிறியளவிலேயே பயன்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

தகவல் அறியும் உரிமைச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கான அனைத்து குறிப்பிட்ட நிகழ்வுகளும் ஆணைக்குழுவின் கவனத்திற்குக்கொண்டுவரப்பட வேண்டும் என்று பதிலளித்த ஆணைக்குழு, மேலும் அத்தகைய விடயங்களை ஆணைக்குழு வலுக்கட்டாயமாகவிசாரணை செய்யும் என்றுகூறியது.

வடமாகாணத்தில் தமிழ் மொழியில் தகவல்களை வெளியிடுவதில் அரசியலமைப்பின் விதிகளுக்கு இணங்க பகிரங்க அதிகாரசபைகள் செயற்பட வேண்டும் எனவும், இந்தச் சந்தர்ப்பங்களில் உரியமுறையில் பதிலளிக்கத் தவறினால் ஆணைக்குழு அதனை விசாரிக்கும் விசாரணை செய்வதாகவும் எனவும் குறிப்பிடப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள்...

2023-03-24 13:46:22
news-image

மட்டக்களப்பில் பஸ் மோதி பெண் உயிரிழப்பு...

2023-03-24 14:03:21
news-image

நீதித்துறையை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும் - சிவில்...

2023-03-24 12:23:46
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன்...

2023-03-24 13:18:52
news-image

யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்!

2023-03-24 11:48:33
news-image

கம்பளை பாடசாலை ஒன்றின் 17 மாணவர்களின்...

2023-03-24 11:53:59
news-image

பாதாள உலகின் முக்கிய புள்ளி புரு...

2023-03-24 11:08:33
news-image

விமானப்படையின் முன்னாள் அதிகாரி கறுப்புபட்டியலில் -...

2023-03-24 11:02:50
news-image

கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நீர்விநியோகத்...

2023-03-24 11:00:38
news-image

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை...

2023-03-24 10:02:20
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணை வழக்கு ;...

2023-03-24 10:08:27
news-image

சர்வதேச நாணயநிதியம் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னர்...

2023-03-24 09:38:18