புதிய முஸ்லிம் கூட்டமைப்புக்கள் ?

By Digital Desk 5

02 Oct, 2022 | 03:37 PM
image

எம்.எஸ்.தீன் 

முஸ்லிம் அரசியலை சீராக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையும் முஸ்லிம்களின் அரசியலை சிதைந்தமைக்கு காரணமாகும். இந்நிலையில் முஸ்லிம்களிடையே அரசியல் கட்சிகள் இன்னும் அதிகரிக்குமாயின் அரசியல் பெறுமானமற்றதொரு சமூகமாக முஸ்லிம்கள் விளங்க வேண்டியேற்படும். முஸ்லிம்களிடையே இன்னும் கட்சிகள் ஏற்படக் கூடாதென்று கூறுவதால் தற்போதுள்ள முஸ்லிம் கட்சிகள் சரியான பாதையில் பயணிக்கின்றன என்று கருதிவிட முடியாது.

தபோதைய அரசியல் சூழலில் எல்லா முஸ்லிம் கட்சிகளும் நலிவடைந்துள்ளன. கட்சிகளின் மோசமான நலிவுக்கு அக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களே காரணமாகவுள்ளனர். தற்போது முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸின் ஆகியவற்றின் தலைவர்கள் தனியாக இருக்கிறார்கள். இவர்களுடன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில்லை. 

அவர்களுக்கு அமைச்சர் பதவிகளின் மீது அதிக ஆசை ஏற்பட்டதனால் தலைவரை மாற்ற வேண்டும். கிழக்கிற்கு தனித் தலைமை வேண்டுமென்று கூறத்தலைப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் முரண்பட்டுக்கொண்டு முக்கிஸ்தர்கள் வெளியேறியபோது ஹக்கீம் சிறந்த தலைவர் என்று கூறியவர்களே தற்போது கிழக்கிற்கு தலைமை வேண்டும் என்று கோசமிடத் தொடங்கியுள்ளனர். 

இவர்கள் கிழக்கிற்கு தலைமை வேண்டும் என்று கோருவதில் சுயலாப அரசியலே குவிந்துள்ளது. தேர்தல்களின் போது முஸ்லிம் அலகு, தென்கிழக்கு அலகு, கரையோர மாவட்டம் என்று பல கோசங்களை முன் வைத்தவர்களுக்கு அடுத்த தேர்தலில் முன் வைப்பதற்கு கோசமில்லாத நிலையிலேயே கிழக்கிற்கு தலைமை வேண்டும் என்ற கோசமாகும். 

இதேவேளை, அரசியலில் தீவிரமில்லாத சமூகவாதிகள் பலரும் கிழக்கிற்கு தனித்துவமான தலைமை வேண்டுமென்று சொல்வதில் சமூகப் பொறுப்புள்ளது. தலைவர்களின் மீது நம்பிக்கையிழந்த நிலையாகும்.  கட்சிகளின் தலைவர்களுடன் முரண்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒரு கூட்டமைப்பாக உருவாகவுள்ளார்கள். 

முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் முரண்பாட்டாளர்களை இணைத்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஆரம்ப  பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுள்ளன. இவ்வாறொரு கூட்டமைப்பு உருவாகுமாயின் முஸ்லிம் காங்கிரஸ{ம், மக்கள் காங்கிரஸ{ம் ஒரு கூட்டமைப்பாக உருவாகக் கூடிய சூழலை ஏற்படுத்திவிடும். 

அதாவுல்லாஹ், ஹஸன்அலி, பசீர் சேகுதாவூத் உள்ளிட்டவர்கள் எந்த அணியில் இணைந்து கொள்வர் என்று இப்போதைக்கு கூறமுடியாது. ஹஸன்அலி, பசீர் சேகுதாவூத் அணியினர் வெளிப்படையாக அரசியல் கருத்துக்களை முன் வைப்பதற்கு முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.

முஸ்லிம்களின் வாக்குகளை சிறடிக்கச்; செய்வதே பேரினவாதக் கட்சிகளின் திட்டமாகும். அதற்காகவே பேரினவாதிகள் முஸ்லிம் கட்சிகளிடையே பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பேரினவாதிகளின் இத்திட்டத்தை முஸ்லிம்களிடையே அமுலாக்கம் செய்வதற்காகவே அமைச்சர் பதவிகளும், வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. 

நாட்டில் பல தேசியப் பிரச்சினைகள் உள்ளன. அவற்றிக்கு தீர்வு காண வேண்டும். அதற்கான கருத்துக்களை முன்வைக்க வேண்டும். முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய பிரச்சினைகள் குறித்து எந்தவொரு கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. மௌனத்தின் மூலமாக ஆட்சியாளர்களுடன் உள்ளோம் என்று காட்டவும், சமூகத்தோடும் இருக்கிறோம் என்று காட்டவுமே எண்ணுகின்றனர். இவர்களின் இந்த வேடத்தரிப்பை கிழக்கு முஸ்லிம்கள் சரியாகப் புரிந்து, வெறுத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

இதேவேளை, தாம் எதனைச் சொன்னாலும் அதனை நம்பி தமக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளார்கள். இதனால்தான் தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களிடம் வருகின்றவர்களாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்களாகவும் அரசியல்வாதிகள்வாதிகள் உள்ளனர். அவர்களுக்கே வாக்களிக்கும் பழக்கத்தையும் முஸ்லிம் வாக்காளர்கள் கொண்டுள்ளார்கள். இந்த நிலைமை மாற வேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளை எடுத்துக் கொண்டால் அக்கட்சிகள் குறித்து மக்களிடையே பலத்த சந்தேகங்களும், கேள்விகளும் உள்ளன. கட்சிகளின் கட்டமைப்பு முற்றாக செயழந்து காணப்படுகின்றன. பிரதேச ரீதியாக எந்தவொரு முஸ்லிம் கட்சிகளுக்கும் கிளைகளும், மத்திய குழுக்களும் இயக்கத்தில் கிடையாது. 

மேலும், கட்சியின் கட்டமைப்பு செயழந்துள்ள அதேவேளையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொந்த ஊர்களில் பலமான அணிகளை உருவாக்கி வைத்துள்ளார்கள். இந்த அணிகள் பொதுச் சிந்தனையின் அடிப்படையில் செயற்படுவதில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்டளைகளை மாத்திரம் நிறைவேற்றும் அணிகளாகவே இருக்கின்றன. 

இதேபோன்று முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் பிரதேச ரீதியாக தம்மை ஆதரிக்கின்ற குழுவினரை வைத்துள்ளார்கள். இப்படி முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தனித்தனியாக குழுக்களை வைத்துக் கொண்டு செயற்படுவதில் சமூக நீதியை அவதானிக்க முடியவில்லை. தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் போட்டி அடிப்படையில் செயற்படுவதனால் முஸ்லிம்கள் நன்மைகளைப் பெறப் போவதில்லை. 

முஸ்லிம்களின் அரசியல் பலத்தை சிதைத்து பணமாக்கிக் கொண்டது போதாதென்று கட்சிகளை முற்றாக அழித்து புதைத்துவிடுவதற்கும் துணிந்தவர்களாகவே முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். அதேவேளை, கட்சியின் கட்டமைப்பை சீரமைத்து கடந்த கால தவுறுகளை சரி செய்து கொண்டு கட்சியை வளர்த்து சமூகத்தின் குரலாக செயற்படுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்ற சிந்தனை முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் யாரிடமும் கிடையாது. 

விமர்சனங்களுக்கு அப்பால் கிழக்கு மாகாணத்திற்கு அடிக்கடி விஜயம் செய்கின்ற ஒருவராக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மாத்திரமே உள்ளார். அவர் திருமண வீட்டுக்கு வந்தாலும் இரண்டு நாட்கள் வருகை தரும் மாவட்டத்தில் தரித்திருந்து ஆதரவளர்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றார்.

இந்தச் சந்திப்புக்களில் சமூக அரசியலையோ, வேறு சமூகப் பிரச்சினைகளையோ பேசாது போனாலும் கட்சியின் ஆதரவாளர்களில் பலர் அதில் ஒரு வகையான திருப்தியை வெளியிட்டுகிறார்கள். ஆனால், மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் கிழக்கு மாகாணத்திற்கு வந்த திகதியை அக்கட்சியின் ஆதரவாளர்கள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லாஹ் கூட கட்சியின் ஆதரவாளர்களை சந்திப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கவில்லை. 

தேர்தல் காலங்களில் மக்களின் உணர்ச்சியை ஊட்டி அதில் குளிர் காய்ந்து கொள்வது ஒரு அரசியல் தலைவனுக்குரிய இலட்சனமாக பார்க்க முடியாது. அவ்வாறு செயற்படுபவர்கள் அரசியல்வாதிகளாக மாத்திரமே இருக்க முடியும். சமூகத்தின் தலைவராக இருக்க முடியாது. தலைவர் என்பவர் மக்களை அடிக்கடி சந்திக்கின்றவராகவும், மக்களை குறைகளை நிபர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பவராகவும், சமூகத்தின் குரலாகவும், உரிமைகளை வெல்லுவதற்குரிய துணிச்சலைக் கொண்டவராகவும், மக்களின் அபிமானத்தை அதிகரித்துக் கொண்டு செல்பவராகவும் இருந்தால் மாத்திரமே சமூகத்தின் அரசியல் தலைவர் என்ற உயர்ந்த அந்தஸ்தை அடைய முடியும்.

ஆதலால், இன்று முஸ்லிம்களிடையே அதிகமான அரசியல்வாதிகள் உள்ளனர். ஆனால், சமூகத்தின் அரசியல் தலைவர்கள் யாருமில்லை. இந்த வெற்றிடத்தை நிரப்பாத வரை முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியாது. இதற்காக முஸ்லிம்கள் விழித்துக் கொள்ளாத வரை முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள் என்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

முஸ்லிம்களின் விடிவு முஸ்லிம்களின் கைகளிலே உள்ளது. முஸ்லிம் சமூகத்தின் விடிவு இன்றைய அரசியல்வாதிகளின் கைகளில் இல்லையென்பதை முஸ்லிம்கள் புரிந்து செயற்பட வேண்டும். ஒரு சமூகம் விளித்துக் கொள்ளாத வரை அச்சமூகத்தின் எதிர்காலத்தை கட்டியயெழுப்ப முடியாது என்பதனை முஸ்லிம்கள் விளங்கிக் கொண்டதாக தெரியவில்லை.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமான் பணிப்பெண்கள் விவகாரம் : மத்திய...

2022-12-01 14:33:01
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மலையகத்தில் ஒன்றிணைந்த...

2022-12-01 14:32:19
news-image

உலக அழகி பிரியங்கா சோப்ரா மீதே...

2022-11-29 16:09:16
news-image

மத்திய வங்கியின் ஆளுநருக்கு மாதம் நான்கு...

2022-11-30 15:48:59
news-image

விடத்தல்தீவு எனும் இயற்கைப் வனத்தைப் பாதுகாப்போம்

2022-11-29 17:25:43
news-image

உணரப்பட வேண்டிய பெறுமதி

2022-11-28 15:05:06
news-image

உலக நீதி சீர்குலைந்த நாள் :...

2022-11-28 13:21:05
news-image

ஸ்கொட்லாந்தும் சுயநிர்ணய உரிமையும் - ஒரு...

2022-11-28 12:29:41
news-image

உலகப் போர் நினைவுச் சின்னங்களின் பின்னணியில்...

2022-11-28 11:05:34
news-image

அரசியல் தீர்வு: முஸ்லிம் தரப்பின் நிலைப்பாடு...

2022-11-27 17:30:18
news-image

உக்ரேனில் நீளும் போரும் குறைந்துவரும் ஆதரவும்

2022-11-27 17:16:51
news-image

வரவு - செலவுத் திட்டம் 2023...

2022-11-27 16:08:24