தமிழகம்- கேரளாவில் இந்து தலைவர்களை கொல்ல சதி திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கையால் பாதுகாப்பு அதிகரிப்பு

By Rajeeban

02 Oct, 2022 | 12:50 PM
image

தமிழகம்-கேரளாவில் இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதை தொடர்ந்து இந்த 2 மாநிலங்களிலும் இந்து இயக்க தலைவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் செல்லும் இடங்களில் உஷாராக இருக்க போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் 5 பேரின் பெயர் பட்டியலை கொடுத்து அவர்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவு பிரிவினர் எச்சரித்து உள்ளனர்.

இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட அந்த தலைவர்களுக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.)யை சேர்ந்த கமாண்டோ வீரர்கள் 5 தலைவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பார்கள். 2 அல்லது 3 கமாண்டோ பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள். இவர்களில் தலைமை பொறுப்பில் உள்ள 4 நிர்வாகிகளும் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போன்று இந்து இயக்கங்களில் தீவிரமாக செயலாற்றி வரும் முன்னணி நிர்வாகிகளும் வெளியில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் வெளியில் செல்லும் போது தங்களது பாதுகாப்பு விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தந்த பகுதிகளில் வேகமாக செயல்படும் இந்து இயக்க நிர்வாகிகள் யார்-யார் என்பதை கண்டறிந்து அவர்கள் வீடுகள் மற்றும் அவர்கள் செல்லும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உளவு பிரிவு போலீசார் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் பிரபல நடிகை காஸியானி பிணையில்...

2022-11-28 16:37:26
news-image

ரஷ்யா - உக்ரைன்  போரில் குளிா்காலம்,...

2022-11-28 17:01:08
news-image

துபாய், ஐரோப்பாவில் 30 தொன் போதைப்பொருள்...

2022-11-28 16:16:13
news-image

கணவனைக் கொலைசெய்து 22 துண்டுகளாக வெட்டி...

2022-11-28 15:04:43
news-image

சோமாலிய ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் படையினர் மோதல்:...

2022-11-28 13:14:47
news-image

பெண்கள் ஆடை பற்றிய கருத்தால் சர்ச்சை:...

2022-11-28 12:42:05
news-image

இந்தியா - பூடான் இணைந்து உருவாக்கிய...

2022-11-28 13:40:27
news-image

பாப்பரசருடனான தொலைபேசி உரையாடலை இரகசியமாக பதிவுசெய்த...

2022-11-28 12:26:34
news-image

மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன்...

2022-11-28 12:16:33
news-image

மின் கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய...

2022-11-28 10:35:31
news-image

கொவிட் ஊரடங்கிற்கு எதிராக சீனாவில் போராட்டம்...

2022-11-28 09:59:28
news-image

கெமரூனில் மண்சரிவு : 14 பேர்...

2022-11-28 08:45:21