இலங்கைக்கு வெளியில் வெளிநாடொன்றில் இடம்பெற்ற பேஸ்போல் தொடரில் இலங்கை கடற்படை பேஸ்போல் மகளிர் அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்ததன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அமெச்சூர் பேஸ்போல் சங்கம் ஏற்பாடுசெய்திருந்த பேஸபோல் போட்டித் தொடர் இம் மாத முதல் வாரத்தில் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இடம்பெற்றது.

இத் தொடரில் அனைத்து போட்டிகளிலும் பெற்றிபெற்ற இலங்கை கடற்படை பேஸ்போல் மகளிர் அணி, இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் கசற்செற் பல்கலைக்கழக மகளிர் பேஸ்போல் அணியை சந்தித்தது. இப் போட்டியில்  8:7 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை கடற்படை மகளிர் அணி வரலாற்று சாதனையைப் பதிவுசெய்துள்ளது.

இந்ந வெற்றியின் மூலம் வெளிநாடொன்றில் இடம்பெற்ற பேஸ்போல் போட்டியில் வெற்றிபெற்ற முதலாவது இலங்கை பேஸ்போல் மகளிர் அணியாக இலங்கை கடற்படை மகளிர் அணி திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.