கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் செப்டெம்பரில் 69.8 சதவீதமாக உயர்வடைந்தது பணவீக்கம் -ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.5 சதவீத அதிகரிப்பு

By Vishnu

02 Oct, 2022 | 10:54 AM
image

(நா.தனுஜா)

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் பணவீக்கம் கடந்த செப்டெம்பர் கணசமானளவினால் உயர்வடைந்து 69.8 சதவீதமாகப் பதிவாகியிருக்கின்றது. இப்பணவீக்கமானது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 64.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது செப்டெம்பரில் 5.5 சதவீத அதிகரிப்பைக் காண்பித்திருக்கின்றது.

கடந்த ஒருமாதகாலத்தில் பழங்கள், கோழி இறைச்சி, கோதுமை மா உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மற்றும் வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு, உணவகம், சுகாதாரம், கல்வி, தொடர்பாடல் போன்ற உணவல்லாப்பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்களில் ஏற்பட்ட அதிகரிப்பே இப்பணவீக்க உயர்விற்குப் பிரதான காரணமாக அமைந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

குறிப்பாக உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் மாதாந்த விலையதிகரிப்பு பணவீக்கம் உயர்வடைவதற்கான முக்கிய காரணமாக அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி கடந்த ஓகஸ்ட் மாதம் 93.7 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவுப்பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் 94.9 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும், ஓகஸ்டில் 50.2 சதவீதமாகக் காணப்பட்ட உணவல்லாப்பணவீக்கம் செப்டெம்பர் 57.6 சதவீதமாக உயர்வடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

அதேவேளை உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் விலைகளைப் பொறுத்தமட்டில், அவற்றில் முறையே 0.35 சதவீதம் மற்றும் 3.42 சதவீதம் என்ற அடிப்படையில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் கடந்த செப்டெம்பரில் 3.77 சதவீதமாகப் பதிவாகியது. 

இக்கணிப்பீட்டின்படி பொருளாதாரத்தின் அடிப்படைப்பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கமானது கடந்த ஓகஸ்ட் மாதம் 46.6 சதவீதமாகப் பதிவாகியிருந்த போதிலும், அது செப்டெம்பர் மாதம் 50.2 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. அதேவேளை ஓகஸ்ட் மாதம் 20.3 சதவீதமாகப் பதிவான ஆண்டுக்கான சராசரி மையப்பணவீக்கம், செப்டெம்பரில் 24.1 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

 இவ்வாறானதொரு பின்னணியில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜுன், ஜுலை, ஓகஸ்ட் ஆகிய கடந்த 8 மாதகாலப்பகுதியில் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாகக் கணிப்பிடப்பட்ட பணவீக்கமானது முறையே 14.2, 15.1, 18.7, 29.8, 39.1, 54.6, 60.8, 64.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், இது செப்டெம்பர் மாதத்தில் 69.8 சதவீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்கரைப்பற்றுக்கு ஹெரோயின் கடத்தி வந்தவர் கைது

2022-12-02 11:49:42
news-image

உலகின் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில்...

2022-12-02 12:12:05
news-image

இலங்கையின் அரசியல் கட்சிகளிற்கு அதிகாரத்தை கைப்பற்றுவது...

2022-12-02 11:27:45
news-image

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும்...

2022-12-02 11:47:59
news-image

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை...

2022-12-02 10:58:52
news-image

இன்றும் யாழ். கல்லுண்டாயில் 3ஆவது நாளாக...

2022-12-02 10:54:22
news-image

பணி இடை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல்...

2022-12-02 10:25:52
news-image

இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண...

2022-12-02 10:28:09
news-image

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு...

2022-12-02 10:32:00
news-image

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்...

2022-12-02 10:32:49
news-image

2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை...

2022-12-02 09:07:32
news-image

யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி...

2022-12-02 10:20:59