குறைகிறது பெற்றோல் விலை : விபரங்கள் இதோ !

01 Oct, 2022 | 07:18 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக 450 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஒக்டேன் 92 ரக பெற்றுால் லீற்றரின் விலை தற்போது 40 ரூபாவால் குறைக்கப்பட்டு  அதன் புதிய விலை 410 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  540 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஒக்டேன் 95 ரக பெற்றோலின் புதிய விலை 510 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்,  ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைவாக  ஐ.ஓ.சி. நிறுவனமும் பெற்றோலின் விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எரிபொருள் விலையை குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதுடன்  விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிங்கள குடியேற்றத்துக்காக தமிழர் தாயகம் இராணுவத்தினரால்...

2023-03-21 19:48:06
news-image

நவம்பர் 18 இன் பின்னர் தேர்தல்...

2023-03-21 17:21:57
news-image

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க...

2023-03-21 17:33:38
news-image

சுதந்திர ஊடக செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த வேண்டாம்...

2023-03-21 19:50:58
news-image

அரசாங்கம் மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுக்க...

2023-03-21 19:54:32
news-image

இலங்கையில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவு மனித...

2023-03-21 19:52:01
news-image

கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தைக்...

2023-03-21 16:51:25
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் என்ன...

2023-03-21 17:05:42
news-image

கடன்களின் ஸ்திரத்தன்மை வெகுவிரைவில் உறுதிப்படுத்தப்படும் -...

2023-03-21 17:31:42
news-image

செய்தியில் பொய்யை மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களுக்கு...

2023-03-21 17:13:08
news-image

இலங்கை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின்...

2023-03-21 17:25:01
news-image

ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நேர்மையாக முன்னெடுக்கப்படும்...

2023-03-21 19:55:55