விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இளையோரின் சமூக ஆய்வுகளைப் பகிரும் வட்டமேசை கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் நேற்று (30.09) இடம்பெற்றிருந்தது.
இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் சமுதாயத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள சமகால சமூகப் பொருளாதார, உளவியல், சுகாதார பிரச்சினைகள் மற்றும் இடைவெளிகள் தொடர்பிலான ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தல். மற்றும் கலந்துரையாடல் யாழ் பல்கலைக்கழக சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் சிறீஸ்கந்தராஜா சிவகாந்தன் அவர்களின் நெறிப்படுத்தலிலும்
கொரோனாவும் பெண்கள் மற்றும் நலிவுற்றோர் மீதான சமூக பொருளாதார மற்றும் உளவியல் தாக்கங்களும் எனும் தொனிப்பொருளிலான ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தல் மற்றும் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் பால்நிலை மற்றும் அபிவிருத்திச் செயற்பாட்டாளர் ரஜனி சந்திரசேகரம் அவர்களின் நெறிப்படுத்தலிலும் கொரோனாவும் பெண்கள் மற்றும் நலிவுற்றோர் மீதான சமூக பொருளாதார மற்றும் உளவியல் தாக்கங்களும் எனும் தொனிப்பொருளிலான ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தல் மற்றும் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் CCH நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திருநாவுக்கரசு மயூரன் அவர்களின் நெறிப்படுத்தலிலும் மூன்று பிரிவுகளாக ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
நிகழ்வில் வடமாகாண விவசாயத் திணைக்கள பணிப்பாளர் திருமதி அஞ்சனாதேவி சிறீரங்கன் அவர்கள் கலந்து கொண்டு அங்குரார்ப்பண உரை நிகழ்த்தினார் நிகழ்வில் இந்த ஆய்வுகள் தொடர்பான கலந்துரையாடலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த அரச அதிகாரிகள் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM