தேசிய விருது பெற்ற நடிகர் கிஷோர் நடிக்கும் 'மஞ்சக்குருவி'

By Digital Desk 5

01 Oct, 2022 | 04:04 PM
image

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'விசாரணை' என தேசிய விருது பெற்ற திரைப்படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை அளித்திருக்கும் நடிகர் கிஷோர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மஞ்சக்குருவி' எனும் படத்தின் ஓடியோ மட்டும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் அரங்கன் சின்னத்தம்பி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'மஞ்சக்குருவி'. இதில் நடிகர் கிஷோர் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் குங்ஃபூ எனும் தற்காப்பு கலையின் பயிற்சியாளரான ராஜநாயகம் வில்லனாக நடித்திருக்கிறார் இவர்களுடன் விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சுப்புராஜ், 'சூப்பர் குட்' சுப்பிரமணி, 'கோலிசோடா' பாண்டி, சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். வேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, 'இசை கவிஞன்' சௌந்தர்யன் சிறிய இடைவெளிக்கு பிறகு இசையமைத்திருக்கிறார்.  கிராமிய பின்னணியில் அமைந்த இந்த திரைப்படத்தை வி. ஆர். கம்பைன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திருமதி விமலா ராஜநாயகம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, இறுதி கட்டப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஓடியோ மற்றும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' தமிழ் திரை உலகின் எவர்கிரீன் சென்டிமென்ட் உறவுகளில் ஒன்றான அண்ணன்- தங்கை உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து 'மஞ்சக்குருவி' படத்தின் திரைக்கதை உருவாகி இருக்கிறது. 'இசை கவிஞன்' சௌந்தர்யனின் சொந்தக் குரலில் பாடிய ‘ கூட பொறந்த பொறப்பே..’ எனும் தத்துவ பாடல் ரசிகர்களின் மனதை கவரும்.'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்