சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற நடிகர் சூர்யா

By Digital Desk 5

01 Oct, 2022 | 04:03 PM
image

புது தில்லியில் நடைபெற்ற 68 ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார்.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் சார்பில் திரைப்படத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது ' சூரரைப் போற்று' படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யா தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவருக்கு நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சூர்யாவிற்கு விருதினை வழங்கி கௌரவித்தார்.

சூர்யாவின் தயாரிப்பில் உருவான 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை என ஐந்து விருதுகளை வென்றிருக்கிறது. சிறந்த திரைப்படத்திற்கான விருதை திருமதி ஜோதிகா சூர்யா பெற்றுக் கொண்டார். சிறந்த திரைக்கதைகான விருதை இயக்குநர் சுதா கொங்காரா பெற்றுக்கொண்டார். சிறந்த பின்னணி இசைக்கான விருதை இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் 'சூரரைப் போற்று' திரைப்படத்துடன் தமிழில் வெளியான 'சிவரஞ்சினியும் சில பெண்களும்' என்னும் திரைப்படமும், 'மண்டேலா' எனும் திரைப்படமும் இணைந்து மூன்று தேசிய விருதுகளை வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்