மறைந்த பிரித்தானிய மகாராணியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற இளம் இராணுவ வீரர் சடலமாக மீட்பு

By T. Saranya

01 Oct, 2022 | 03:17 PM
image

மறைந்த இரண்டாம் எலிபெத் மகாராணியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற இளம் இராணுவ வீரர் லண்டனில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

18 வயதான ட்ரூப்பர் ஜாக் பர்னல்-வில்லியம்ஸ் என்ற இராணுவ வீரர் மறைந்த இரண்டாம் எலிபெத் மகாராணியின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயிலிருந்து வெலிங்டன் வரையான இறுதி ஊர்வலத்தில்  பங்கேற்றார்.

இந்நிலையில், ஜாக் என்று அழைக்கப்படும் மேற்படி இராணு வீரர்  மத்திய லண்டனில் நைட்ஸ்பிரிட்ஜில் உள்ள  இராணுவ வீர்ரகள் தங்கும் இடத்தில் இறந்து கிடந்துள்ளார்.

புதன்கிழமை மாலை தகவல் வழங்கப்பட்டு பொலிஸார் ஹைட் பார்க் பாராக்ஸுக்கு வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் வந்தபோது இராணுவ வீரர் உடல் செயலற்று இருந்தது. மேலும் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவரது மரணம் "எதிர்பாராதது" என்றும் ஆனால் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ வீரர் உயிரிழப்பு அவரது தயார் ராணியின் அரசு இறுதிச் சடங்கில் தனது மகன் பங்கேற்ற வீடியோக்களை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

அதில்,

 "நான் இதைச் சொல்வேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை, ஆனால் எங்கள் அற்புதமான மகன் ஜாக் வில்லியம்ஸ் நேற்று திடீரென இறந்ததால் ஒரு குடும்பமாக நாங்கள் அனைவரும் மனம் உடைந்துள்ளோம்". இன்று பெருமையாக இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இராணுவ வீரருக்கு சமூக வலைதளங்களில் அஞ்சலிகள் குவிந்த வண்ணம் உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் பிரபல நடிகை காஸியானி பிணையில்...

2022-11-28 16:37:26
news-image

ரஷ்யா - உக்ரைன்  போரில் குளிா்காலம்,...

2022-11-28 17:01:08
news-image

துபாய், ஐரோப்பாவில் 30 தொன் போதைப்பொருள்...

2022-11-28 16:16:13
news-image

கணவனைக் கொலைசெய்து 22 துண்டுகளாக வெட்டி...

2022-11-28 15:04:43
news-image

சோமாலிய ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் படையினர் மோதல்:...

2022-11-28 13:14:47
news-image

பெண்கள் ஆடை பற்றிய கருத்தால் சர்ச்சை:...

2022-11-28 12:42:05
news-image

இந்தியா - பூடான் இணைந்து உருவாக்கிய...

2022-11-28 13:40:27
news-image

பாப்பரசருடனான தொலைபேசி உரையாடலை இரகசியமாக பதிவுசெய்த...

2022-11-28 12:26:34
news-image

மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன்...

2022-11-28 12:16:33
news-image

மின் கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய...

2022-11-28 10:35:31
news-image

கொவிட் ஊரடங்கிற்கு எதிராக சீனாவில் போராட்டம்...

2022-11-28 09:59:28
news-image

கெமரூனில் மண்சரிவு : 14 பேர்...

2022-11-28 08:45:21