சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

By Digital Desk 5

01 Oct, 2022 | 04:03 PM
image

'டாக்டர்', 'டான்' ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து லக்கி ஸ்டார் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் ' பிரின்ஸ்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

தெலுங்கு இயக்குநர் கே. வி. அனுதீப் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'பிரின்ஸ்'. இதில் சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக உக்ரேனிய நாட்டு நடிகை மரியா ரியாபோஷப்கா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் பரஹாம்சா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசை அமைத்திருக்கிறார். காதலையும், பொழுதுபோக்கையும் மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ், சாந்தி டாக்கீஸ் ஆகியோருடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி எனும் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாரித்திருக்கிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். தீபாவளி வெளியீடாக வெளியாக இருக்கும் இந்த 'பிரின்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் ஓடியோ வெளியீடு விழா ஒக்டோபர் மாதம் ஒன்பதாம் ஆம் திகதியன்று சென்னையில் நடைபெறும் என அதிகாராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'பிரின்ஸ்' படத்தின் வசூல் ரீதியான வெற்றியின் மூலம் சிவகார்த்திகேயன் ஹாட்ரிக் வெற்றியை பெறுவார் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்