கொழும்பு நகரத்திற்குள் 2016ஆம் ஆண்டு முதல் சொகுசு பஸ் சேவைகளை ஆரம்பிக்கப் போவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

80 சிறிய பஸ்களை கொள்வனவு செய்தல், நாடு பூராகவும் உள்ள பஸ் டிப்போக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் உட்பட்ட பல திட்டங்கள் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக மேலும், அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.