பி. கே. பாலசந்திரன்
நான்கு ஆண்டுகளுக்கு அதிகமான ஒரு காலப் பகுதிக்கு பரந்துசெல்லும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் அளவான ஒரு நீடித்த நிதி வசதியின் (EFF) நிமித்தம் IMF நிதியத்துடன் இலங்கை செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதி பதவிநிலை மட்டத்திலான ஒரு ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது. அழிந்து போன பொருளாதாரத்தை முழுமையாக சீர்செய்து கட்டியெழுப்புவதன் ஊடாக நம்பகமான ஒரு திட்டத்தை IMF நிதியத்தினது நிபந்தனைகளின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் முன்வைத்ததால் நிதி வசதி கிடைத்தது.
ஆனாலும், இந்த பதவிநிலை மட்டத்திலான ஒப்பந்தம், நிதியை விடுவித்துக்கொள்வதற்கான ஒரு நடைமுறையின் ஆரம்பம் மட்டுமே. குறித்த இந்த பதவிநிலை ஒப்பந்தம் ‘முன்னைய செயற்பாடுகளினதும் அதிகாரங்களினதும் செயற்படுத்துகை, இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் தரப்புகளிடமிருந்து நிதி உத்தரவாதங்களை பெறுதல் மற்றும் தனியார் கடன் தரப்புகளுடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தை செய்துகொள்வதற்கான ஒரு நல்லெண்ண முயற்சியை செய்தல் வேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில், எதிர்காலத்தில் IMF நிதியத்தின் முகாமைத்துவமும் மற்றும் நிறைவேற்று சபையும் வழங்கும் அங்கீகாரத்திற்கு அமைவானதாகும் என IMF நிதியம் ஒரு ஊடக வெளியீட்டு சந்திப்பின் போது தெரிவித்தது.
கடனின் நிலைபெறுதகுதன்மையையும் மற்றும் நெருங்கிய நிதியிடுகை இடைவெளிகளையும் உறுதிசெய்ய உதவும் பொருட்டு இலங்கையின் கடன் தரப்புகளிடமிருந்து கிடைக்கும் கடன் நிவாரணமும் மற்றும் பல தரப்பு பங்காளிகளிடமிருந்து கிடைக்கும் மேலதிக நிதி வசதியும் தேவைப்படுத்தப்படும்
கடனின் உண்மையான புரிந்துணர்வு இலங்கையின் வெளிவாரி கடன் தரப்புகளினது "கடன் வரையறைகளுக்கும்" மற்றும் பரஸ்பர ரீதியாக உடன்பட்டுள்ள முறையில் கடனை மீளச்செலுத்துவதற்குமான விதிமுறைகளை மறுசீரமைப்பதற்குரிய விருப்பத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.
இங்குதான் பிரச்சனை எழுகின்றது. இருதரப்பு நன்கொடையாளர்களும், சர்வதேச நிதி நிறுவனங்களும் மற்றும் இலங்கையின் சர்வதேச பிணைமுறிகளின் அதிக எண்ணிக்கையிலான தனியார் உரிமையாளர்களும் கலந்த பொதியே கடன் வழங்கும் தரப்புகளாகும்.
ஆகையால் அந்த சகல தரப்புகளும் கொள்கை ரீதியாக வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் ஒரு சூத்திரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தகைய ஒரு கொடுக்கல்வாங்கல் செயற்பாட்டு விடயத்தை நிறைவேற்றிக்கொள்வதற்குரிய பொறுப்பு சாட்டப்பட்டுள்ள இரண்டு சர்வதேச நிறுவனங்களுக்கும் அவ்விடயம் ஒரு எளிதான காரியம் அல்ல.
”ஒவ்வொரு கடன் தரப்புக் குழுவும் பிரச்சினைகளை எழுப்பும். கடன் வழங்கும் தரப்புகளில் பெரும்பான்மை பல்வேறு தனியார் நிறுவனங்களாகும். எனினும், இந்த விடயத்தில் IMF நிதியம் நெகிழ்தன்மையை கடைப்பிடிக்கின்றது. "தனியார் கடன் வழங்கும் தரப்புகளுடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தை செய்துகொள்வதற்கு இலங்கை நல்லெண்ணத்துடன் முயற்சி செய்ய வேண்டும்" என்று மட்டுமே அது கூறியுள்ளது.
ரனில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் மேற்கத்திய கடன் தரப்புகளுடனும், மேற்கு நாடுகளின் நிதியளிப்பு நிறுவனங்களுடனும் நல்லுறவை பேணியுள்ள நிலையில், இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் தரப்புகளிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெறுவது என்பது அவ்வளவு கடினமானதல்ல.
ஆனால் இருதரப்பு நன்கொடையாளர்கள் ஒரே பக்கத்தில் உள்ளடங்குவதில்லை. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாக சீனா கூறினாலும், கடன் வரையறையை ஏற்றுக்கொள்வதற்கு எதிரானது என்றும் கூறியுள்ளது. மறுநிதியளிப்பு வசதியாக இலங்கை தன்னிடமிருந்து மேலும் கடனை பெற வேண்டும் என்று சீனா விரும்புகின்றது. மேற்கத்திய நாடுகளினது பரிந்துரையின்படி கடன் வரையறையை சீனா ஏற்றுக்கொள்ளாது.
எனினும் இலங்கைக்கு முன்பு வழங்கியது போல் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை புதிய கடனாகவும், மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் வாங்கும் தரப்பு கடனாகவும் சீனா வழங்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலைப்பாட்டிலிருந்து சீனா விலகாது. மேற்குலகினது நிபந்தனைகளுக்கு மாறாக சீனா இலங்கைக்கு தனது சொந்த நிபந்தனைகளின் பேரில் ஆதரவளிக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
எனினும், பதவிநிலை மட்டத்திலான ஒப்பந்தத்தை செய்த பின்னர் சீனா தனது நிலைப்பாட்டில் நெகிழ்தன்மையை கடைப்பிடித்துள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது சீன ஊடக பேச்சாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது: முறையான தீர்வுகளை காணுவதற்கு இலங்கையுடன் கலந்தாலோசிப்பதில் ஈடுபாடுடைய நிதி நிறுவனங்களுக்கு சீனா ஆதரவளிக்கும்.
தற்போதைய சிரமங்களையும் மற்றும் கடன் சுமையையும் குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கான முயற்சிகளுக்கும் இலங்கையின் பதிலளிப்புக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து சாதகமான பங்களிப்பை செய்வதில் நாட்டமுடைய நாடுகளுடனும் சர்வதேச நிதி நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்ற நாம் தயாராக உள்ளோம். எனவே, இருள்நிறைந்த பாதையின் முடிவில் ஒளி வீசும்.
எவ்வாறாயினும், இந்தியாவும் மேற்கத்திய உலக நாடுகளும் சீனாவை சர்வதேச அளவில் அங்கீகரித்த "கடன் வரையறை" திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. சீனக் கடன்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் அந்த நாடுகள் விரும்புகின்றன, ஏனெனில் அவற்றின் பார்வையில் சீன நிதி வெளிப்படையானது அல்ல.
சீனாவிலிருந்து பெற்ற கடனை மீளச்செலுத்துவதற்கு வழங்கப்படும் சலுகைகளைஇலங்கை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று மேற்குலக நாடுகள் தெளிவுபடுத்தியுள்ளன. சீனாவின் அடக்குமுறையினால் ஏற்படும் பிரச்சினைகளை இலங்கை எவ்வாறு சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சர்வதேச கடன் வழங்கும் தரப்புகளினது மாநாட்டை ஏற்பாடு செய்யுமாறு இலங்கை ஜப்பானிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இலங்கை அதனை செய்ய வேண்டும் என ஜப்பான் விரும்புகின்றது. இலங்கை அதிகாரிகளுடன் ஜப்பானுக்கு இருந்த சில சமீபத்திய பிரச்சினைகள், இலங்கையை இடரிலிருந்து காப்பாற்றுவதில் முனைப்புடன் செயல்படுவதற்கான டோக்கியோவின் ஆர்வத்தை குறைத்துள்ளன. ஜப்பான் தூதரகம் இலங்கையின் நிலைமையை மதிப்பிடுவதாகவும், இலங்கை அரசாங்கத்துடனும், பிற நன்கொடை நாடுகளுடனும் மற்றும் நிறுவனங்களுடனும் கலந்தாலோசித்து தகுந்த பதில்களை ஜப்பான் பரிசீலித்து பகுப்பாய்வு செய்யும் எனவு த ஹிந்து பத்திரிகைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மறுபடியும், பதவிநிலை மட்டத்திலான ஒப்பந்தத்தை செய்ததிலிருந்து ஜப்பான் தனது நிலைப்பாட்டில் நெகிழ்தன்மையை கடைப்பிடித்துள்ளது. ஜப்பான் நிதி அமைச்சர் Shunichi Suzuki இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்குமாறு சகல கடன் வழங்கும் நாடுகளையும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வலியுறுத்தினார். "சீனா மற்றும் இந்தியா அடங்கலாக சகல கடன் வழங்கும் நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க ஒன்று கூடுவது முக்கியம்" என்று Suzuki செய்தி மாநாட்டில் தெரிவித்தார். அத்தகைய மாநாட்டில் சீனா கலந்துகொள்ள ஒவ்வொரு நாடும் உதவ வேண்டும்.
இந்தியாவின் நிலைப்பாடு, வெளியுறவு அமைச்சின் ஊடக பேச்சாளர் அரிந்தம் பாக்ஷி கூறியது போல், புது தில்லி "கடன்தாரர் சமத்துவத்தையும் வெளிப்படைத்தன்மையையும்" எதிர்பார்க்கின்றது. இது புது டில்லியை பெய்ஜிங்கிற்கு எதிராக மாற்றுகின்றது. இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையில் கிடைத்துள்ள 4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமாக 960 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை இந்தியாவிற்கு செலுத்த வேண்டியுள்ளது.
இப்போது பந்து இலங்கையின் நீதிமன்றத்தின் கையில் உள்ளது. உண்மையில் அது சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இல்லை. சர்வதேச சமூகமும் இலங்கை மீதான அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இலங்கையின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் சிறிமல் அபேரத்ன தெரிவித்துள்ளார். உலகம் பொருளாதார ரீதியாக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது என்பதை இலங்கையின் கடன் வழங்கும் தரப்புகள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதையும், புவிசார் அரசியல் மோதல்களும் முரண்பாடுகளும் அனைவரினதும் வாழ்விற்கு இன்றியமையாத பொருளாதார ஒருங்கிணைப்பை சீர்குலைக்கும் என்பதையும் அவர் இந்த எழுத்தாளரிடம் கூறினார்.
பேராசிரியர் அபேரத்ன, அமெரிக்க பிணைமுறிப் பத்திரங்களில் சீனாவின் முதலீடுகளினால் அமெரிக்கா சீனாவுடன் பிணைந்துள்ளதாகவும், சீனா அமெரிக்க தொழில்நுட்பத்தில் தங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். ரஷ்யா தனது ஆற்றலை சந்தைப்படுத்துவதற்கு ஐரோப்பாவில் தங்கியிருப்பது போலவே ஐரோப்பாவும் ஆற்றலுக்காக ரஷ்யாவில் தங்கியிருக்கின்றது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது அனைத்து முக்கிய நாடுகளின் மீதும் பொறுப்பை சுமத்தியுள்ளது. புவியியல்-அரசியல் பரிமாணத்தின் ஊடாக நெருக்கடியை அவதானிப்பதை அந்த நாடுகள் நிறுத்த வேண்டிய நேரமிது. இதனால் இலங்கை முன்பிருந்த நிலையை அடைவதற்கு காலம் எடுக்கும் என பேராசிரியர் அபேரத்ன தெரிவித்தார்.
உள்நாட்டுப் பிரச்சினைகள்
வெளிநாட்டுக் கடன் தரப்புகளுடன் உள்ள பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, இலங்கையில் அத்தகைய பிரச்சினைகளுக்கு இணையான உள்ளகப் பிரச்சினைகளும் உள்ளன. அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான எதிர்ப்பு பரவலாக காணப்படுகின்றது. சாத்தியமான உறுதியற்ற தன்மைக்கு இது அச்சுறுத்தலாக அமைகின்றது. சந்தேகத்திற்கு இடமின்றி, தற்போதைய ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க, ராஜபகஷக்கள் வழிநடத்தும் பெரும்பான்மை உடைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) வலிமையான ஆதரவுடன் உறுதியாக இருக்கிறார்.
வலிமை சாதனங்களை பிரயோகிக்க தன்னிடம் ஆற்றலும் சாணக்கியமும் உள்ளதால் விக்ரமசிங்கவின் ஆணை நாடு முழுவதிலும் உயிரோட்டமாகவுள்ளது. ஆனாலும் எதிர்கட்சியும் ஊடகங்களும் அவரின் ஜனாதிபதித்துவம் அரசியல் சட்டவாண்தன்மையில் குறையாக இருக்க வேண்டும் என கருதுகின்றன. விக்ரமசிங்க பிரபல்யமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு சென்றிருக்கவில்லை. எனினும் அவர் தேசிய பட்டியலில் நியமனம் பெற்ற ஒருவராவார். அவர் ராஜபக்ஷக்கள் தலைமை வகிக்கின்ற SLPP கட்சியினது ஆதரவில் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் ஆகினார். ஆகையால் சட்டத்திலிருந்து ராஜபஷக்களை காப்பாற்றுவதற்காக மாத்திரம் அவர் அதிகாரத்தில் உள்ளமை இழிவானதாகும்.
ஒரு தாராளவாத சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்தை விவரித்ததும் மற்றும் IMF நிதியத்தினதும் மேற்குலக நாடுகளினதும் ஆதரவை பெற்றதுமாக ஒரு அபிவிருத்தி மைய இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தை விக்ரமசிங்க துணிச்சலாக முன்வைத்திருந்தார் என்பதை அவரை எதிர்க்கின்றவர்கள் மறந்துவிடுகின்றார்கள். சீர்குலைவினால் எழுந்த பதற்றங்களை அவர் தணித்து பொதுமக்களுக்கு சில பொருளாதார நிவாரணத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.
எதிர்கட்சி, ரணில்-ராஜபக்ஷவை ஆட்சியிலிருந்து துரத்திவிடலாம் என்ற நம்பிக்கையுடன் உடனடியாக தேர்தல்களை நடத்த வேண்டும் என கோருகின்றது. விக்ரமசிங்க முன்வைத்த இடைக்கால வரவுசெலவுத்திட்டம் அமோக பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் விலகியமை மேலும் கட்சித் தாவல்களும் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான நம்பிக்கையும் வலுப்பெற்றுள்ளன. விக்ரமசிங்க-ராஜபக்ஷ கூட்டணியில் எந்த ஒரு பயணத்தையும் விரும்பாத எதிர்க்கட்சிகளினது தடைகளினால் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான விக்ரமசிங்கவின் முயற்சி தோல்வியடைந்தது.
தேர்தல்கள் நடத்தப்படலாம் (அதிக செலவுகளுக்கு மத்தியிலும்). ஆனால் தேர்தலுக்குப் பிறகு ஒரு நிலையான அரசாங்கம் அமைக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஏனெனில் எதிர்க்கட்சிகள் கொள்கை மற்றும் அரசியல் ரீதியாக கடுமையாக பிளவுபட்டுள்ளன.
அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாவிட்டால், பாராளுமன்றத்தில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் மயிரிழையில் தொங்கிநிற்கும். இவ்வாறான நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால், சர்வதேச நாணய நிதியம் கோருகின்ற கடினமான பொருளாதார கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்கள் நடைபெறாமல் போகலாம். நஷ்டத்தில் இயங்குகின்ற, திறமையற்ற அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கும் எந்த நடவடிக்கையையும் தொழிற்சங்கங்கள் எதிர்த்துநிற்கும்.
சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்த அதிக வரிவிதிப்பும் கட்டணங்களும் எதிரும்புதிருமாக காணப்படும். மேலும் சீர்திருத்தங்களை கைவிட்டால் அல்லது அரைகுறையாக செயல்படுத்தினால் அது கடன் வழங்கும் தரப்புகள் கடன்களை மட்டுப்படுத்த அல்லது அதிக நிதியை வழங்க தூண்டுதலாக அமையும். இந்த நிலைமைகளில், பொருளாதார நல்வாழ்வையும் அபிவிருத்தியையும் நோக்கிய பயணத்தில் இலங்கை எதிர்வரும் காலங்களில் கடினமாக பயணிக்க வேண்டும்.
கொழும்பைச் சேர்ந்த பி.கே.பாலச்சந்திரன், பல்வேறு செய்தி இணையத்தளங்கள் மற்றும் நாளிதழ்களுக்கு தெற்காசிய விவகாரங்கள் குறித்து பல வருடங்களாக எழுதும் ஒரு சுயாதீன ஊடகவியலாளர் ஆவார். ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் எகனமிஸ்ட் ஆகியவற்றிற்கு கொழும்பு மற்றும் சென்னையிலிருந்து செய்திகளை அறிக்கையிட்டுள்ளார். இலங்கையில் டெய்லி மிரர் மற்றும் சிலோன் டுடே ஆகிய பத்திரிகைகளில் வாராந்த பத்தி ஒன்றையும் எழுதுகின்றார்.
Factum என்பது சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றி இலங்கையில் செயற்படும் ஆசியாவை மையமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழுவாகும். www.factum.lk என்ற இணையத்தளத்தில் இது தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM