ஹெரோயினுடன் ஒருவர் கைது : 23 இலட்சம் ரூபா பணமும் மீட்பு

By Digital Desk 5

01 Oct, 2022 | 12:52 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

அவிசாவல்லை பிரதேசத்தில் 2 கிலோ  65 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்ட 23 இலட்சம் ரூபா பணத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (30) அவிசாவல்லை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவிசாவல்லை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வத்தெகட பிரதேசத்தில்  புலானாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருள் பொதியுடன் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த  போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது அவரின் வீட்டின் தோட்டப் பகுதியில்  புதைத்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு ஹெரோயின் பொதியும் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது அவரிடமிருந்து மொத்தமாக 2 கிலோ 65 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்ட இருந்த 2,385,300 ரூபா பணம், மோட்டார்சைக்கிள் மற்றும் இலத்திரனியல் தராசு ஒன்றும் இதன் போது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 36 வயதுடைய அவிஸ்ஸாவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் சந்தேகநபரை   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அவிஸ்ஸாவெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுபான்மை பிரதிநிதிகளிடையே முக்கிய உரையாடல் அடுத்த...

2023-02-05 17:43:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட...

2023-02-05 17:44:22
news-image

இலங்கையின் கிராமப் புற அபிவிருத்திக்கு இந்தியாவின்...

2023-02-05 17:41:37
news-image

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது...

2023-02-05 17:32:24
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு 10...

2023-02-05 17:35:04
news-image

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது தடவையாக திங்கள்...

2023-02-05 14:39:41
news-image

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம்...

2023-02-05 18:01:18
news-image

ராஜபக்சவின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம் -...

2023-02-05 17:21:35
news-image

தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு...

2023-02-05 17:18:20
news-image

கஜமுத்துக்களை விற்க முயன்ற இளைஞன் கல்முனையில்...

2023-02-05 17:34:01
news-image

இரட்டை பிரஜா உரிமை உடையவர்கள் தொடர்பில்...

2023-02-05 12:55:22
news-image

ஹோட்டல் உரிமையாளரின் மனைவியுடன் மகன் தொடர்பு...

2023-02-05 17:40:33