பாகிஸ்தானை 8 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இங்கிலாந்து

By Digital Desk 5

01 Oct, 2022 | 11:14 AM
image

(என்.வீ.ஏ.)

பாகிஸ்தானுக்கு எதிராக லாகூரில் நேற்று வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற 6ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பில் சோல்ட் குவித்த ஆட்டமிழக்காத அரைச் சதம் இங்கிலாந்தின் 8 விக்கெட் வெற்றியில் பிரதான பங்காற்றியது.

இப் போட்டி முடிவுடன் 7 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க இரண்டு அணிகளும்  தலா 3 வெற்றிகளுடன் சமநிலையில் இருக்கின்றன.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 170 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து குறிப்பிட்ட வெற்றி இலக்கை அடைந்தது.

பில் சோல்ட், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் 23 பந்துகளில் 55 ஓட்டங்களைக் குவித்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அலெக்ஸ் ஹேல்ஸ் 12 பந்துகளில் 27 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து பில் சோல்ட், டேவிட் மாலன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து   பாகிஸ்தானுக்கு பெரும் சோதனையைக் கொடுத்தனர்.

டேவிட் மாலன் 18 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வெற்றிக்கு தேவைப்பட்ட மேலும் 42 ஓட்டங்களை பில் சோல்ட், பென் டக்கெட் ஆகிய இருவரும் நிதானத்துடன் பெற்றுக்கொடுத்தனர்.

பில் சோல்ட் 41 பந்துகளில் 13 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 88 ஓட்டங்களுடனும் பென் டக்கெட் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷதாப் கான் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், அணித் தலைவர் பாபர் அஸாமின் அரைச் சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தானின் துடுப்பாட்ட நட்சத்திரம் மொஹமத் ரிஸ்வான் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக மொஹமத் ஹாரிஸ் ஆரம்ப வீரராக அணித் தலைவர் பாபர் அஸாமுடன் களம் இறங்கினார்.

ஆனால், அவரால் பிரகாசிக்க முடியவில்லை. 7 ஓட்டங்களுடன் அவர ஆட்டமிழந்ததும் ஷான் மசூதும் (0) களம் விட்டகன்றார்.

எனினும் பாபர் அஸாமுடன் இணைந்த ஹைதர் அலி 18 ஓட்டங்களைப் பெற்றதுடன் 3ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பாபர் அஸாம் அணியைப் பலப்படுத்திக்கொண்டிருந்தார்.

அவருடன் 4ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்த இப்திகார் அஹ்மத் அதில் 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

அவரைத் தொடர்ந்து அசிப் அலி 9 ஓட்டங்களுடனும் கடைசிப் பந்தில் மொஹமத் நவாஸ் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பாபர் அஸாம் 59 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 88 ஓட்டங்களுடன்  ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் சாம் கரன் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டேவிட் வில்லி 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிட்சர்லாந்துக்கு எதிராக இறுக்கமான வெற்றியை ஈட்டிய...

2022-11-29 06:23:21
news-image

தென் கொரியாவை வென்றது கானா

2022-11-28 21:06:20
news-image

ஓர் ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து...

2022-11-28 18:24:31
news-image

சேர்பியா - கெமறூன் போட்டி வெற்றிதோல்வியின்றி...

2022-11-28 18:06:08
news-image

உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 :...

2022-11-28 17:14:53
news-image

இலங்கை கிரிக்கெட்டின் 3 வீரர்கள் திருமண...

2022-11-28 16:56:51
news-image

ஜேர்மனிய முன்னாள் வீரரின் படத்துடன் வாய்...

2022-11-28 15:27:48
news-image

பிரேஸில், சுவிட்சர்லாந்து, போர்த்துக்கல், உருகுவே ஆகிய...

2022-11-28 13:56:49
news-image

அடுத்த 5 வருடங்களில் ஆப்கான் நடத்த...

2022-11-28 13:33:39
news-image

மில்ரோய் பெரேரா ஞாபகார்த்த கால்பந்தாட்டம் :...

2022-11-28 14:41:22
news-image

கால்பந்தாட்ட வீரர் மெஸியின் ஆட்டத்தை நேரில்...

2022-11-28 13:03:16
news-image

மொரோக்கோவிடம் பெல்ஜியமடைந்த தோல்வியின் எதிரொலி பிரஸெல்ஸில்...

2022-11-28 10:05:55