(நெவில் அன்தனி)
மிக உயரிய நம்பிக்கையுடன் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கை எதிர்கொள்ளவுள்ளதாக அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்தார்.
இம் மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியின் முதலாம் சுற்றில் (தகுதிகாண்) விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இலங்கை அணியினர், ஞாயிற்றுக்கிழமை (02) அதிகாலை இங்கிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
இந் நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையகத்தில் இன்று (30) பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே தசுன் ஷானக்க இதனைத் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள சகல வீரர்களும் நம்பிக்கையுடன் சிறந்த மனோ நிலையுடனும் விளையாட தயாராக இருக்கின்றனர் என தசுன் ஷானக்க மேலும் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அனுகூலமாக இருப்பதாலும் அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெறுவதாலும் இலங்கைக்கு சாதகமான முடிவுகள் கிடைக்குமா என தசுன் ஷானக்கவிடம் கேட்டபோது,
'இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் 140 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசக்கூடிய 3 வீச்சாளர்கள் ஏககாலத்தில் அணியில் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும். எமது அணி 6 மைதானங்களில் விளையாடவுள்ளதால் அவர்களது பிரசன்னம் எமக்கு பலனிக்கும் என நம்புகிறேன். மேலும் அணியில் இடம்பெறும் வீரர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் உலகக் கிண்ணத்தை எதிர்கொள்ளவுள்ளனர்.
'எவ்வாறாயினும் கிரிக்கெட் போட்டிகளில் அன்றன்று எந்த அணி திறமையாக விளையாடுகிறதோ அந்த அணியே வெற்றிபெறும். எனவே ஒவ்வொரு போட்டியிலும் திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற முயற்சிப்போம். இந்த உலகக் கிண்ணத்தில் நிச்சமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம்' என்றார்.
உலகக் கிண்ண தயார்படுத்தில் போட்டிகளும் முதல் சுற்றுப் போட்டிகளும் இலங்கை அணியின் திறமையை மேலும் அதிகரித்துக்கொள்ள உதவும் என அவர் குறிப்பிட்டார்.
'சுப்பர் 12 சுற்றுக்கு முன்னர் நாங்கள் 2 உத்தியோகபூர்வ தயார்படுத்தில் போட்டிகளில் விளையாடவுள்ளோம். அதனைத் தொடர்ந்து முதல் சுற்றில் 3 போட்டிகளில் விளையாடவுள்ளோம். இந்த 5 போட்டிகளும் அவுஸ்திரேலியாவின் தன்மைக்கு ஏற்ப எம்மை தயார்படுத்திக்கொள்ள பெரிதும் உதவும். எனவே இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் திறமையாக விளையாடக்கூடியதாக இருக்கும்' என தசுன் ஷானக்க கூறினார்.
ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கௌரவ செயலாளர் மொஹான் டி சில்வா, 'இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை மிகத் திறமையாக விளையாடும் என நம்புகிறேன். 2014இல் உலக சம்பயினான இலங்கை, இரண்டு தடவைகள் 2ஆம் இடத்தைப் பெற்றது. இது எமக்கு பெருமை தருகிறது. மேலும் இம்முறை ஆசிய கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணியினர் மனோதிடத்துடனும் நம்பிக்கையுடனும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை எதிர்கொள்வார்கள்' என்றார்.
அத்துடன் இலங்கை கிரிக்கெட் அணியினருக்கான உத்தியோகபூர்வ ஆடைகளை வழங்கிய ப்றெண்டிஸ் பணிப்பாளரும் மூஸ் நிறைவேற்று அதிகாரியுமான ஹசிப் ஓமருக்கு மொஹான் டி சில்வா நன்றி தெரிவித்தார்.
இலங்கை குழாம்
தசுன் ஷானக்க (தலைவர்), சரித் அசலன்க, துஷ்மன்த சமீர, வனிந்து ஹசரங்க டி சில்வா, தனஞ்சய டி சில்வா, தனுஷ்க குணதிலக்க, சாமிக்க கருணாரட்ன, லஹிரு குமார, ப்ரமோத் மதுஷான், டில்ஷான் மதுஷன்க, குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸன்க, பானுக்க ராஜபக்ஷ, மஹீஷ் தீக்ஷன, ஜெவ்றி வெண்டர்சே.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM