அதியுயர் பாதுகாப்பு வலய விவகாரத்தில் தில்லுமுள்ளு

By Vishnu

30 Sep, 2022 | 04:41 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்வதற்கு முன்னர் இரு முக்கிய விடயங்களை முன்னெடுத்திருந்தார். அதாவது அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பெயரிட்டு வர்த்தமானி வெளியிட்டமை மற்றும் ஜனாதிபதியின் விடயதானங்களுக்காக இராஜாங்க அமைச்சரை நியமித்தமையாகும். 

ஆனால் அதியுயர் பாதுகாப்பு வலய விவகாரம் தேசிய மட்டத்தில் மாத்திரமன்றி சர்வதேச அளவிலும் கவனத்தில் கொள்ளப்பட்ட விடயமாகியது. இதற்குறிய வர்த்தமானியில் கொழும்பு மாவட்டத்தில் சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய பாராளுமன்ற கட்டடத்தொகுதியை அண்மித்த பிரதேசம் , உயர் நீதிமன்ற வளாகம் , மேல் நீதிமன்ற வளாகம் , கொழும்பு நீதவான் நீதிமன்றம் , சட்டமா அதிபர் திணைக்களத்தை அண்மித்த பிரதேசம் , ஜனாதிபதி செயலகம் , ஜனாதிபதி மாளிகை , கடற்படை தலைமையகம் , பொலிஸ் தலைமையகத்தை அண்மித்த பகுதிகள், அகுரகொட பாதுகாப்பு அமைச்சு, இராணுவ தலைமையகம் , விமானப்படை தலைமையகம் , பிரதமர் அலுவலகம் , அலரி மாளிகை , பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைத்தளபதிகளின் இல்லங்கள் அமைந்துள்ள பிரதேசங்கள் என்பன அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

1955 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க அரச இரகசிய சட்டக் கோவையின் இரண்டாவது பிரிவின் கீழ் ஜனாதிபதியினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் உரிய அதிகாரியின் அனுமதியின்றி தற்காலி அல்லது நிரந்தர கட்டுமானங்களையோ , அகழ்வுகளையோ முன்னெடுக்க முடியாது. பாதுகாப்பு வலயங்களில் கட்டளைகளை மீறி தவறிழைப்பவர்கள் , 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டக்கோவைக்கு அமைய பிடியாணையின்றி கைது செய்யப்படுவர். 

இவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு மேல் நீதிமன்றதைத் தவிர வேறு பிணை வழங்கப்பட முடியாது என்று குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தெடர்பில் தொழில்சார் நிபுணர்களும் பொருளாதார நிபுணர்களும் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்கவுடன் தொடர்புக் கொண்டு  வினாவினர். ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் போன்றவை பொருளாதார அபிவிருத்தி திட்டங்களுக்கு ஏற்புடையதல்ல.

ஆனால் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பொருளாதாரத்திற்கு வேறு வழிகளில் தாக்கம்  செலுத்த கூடும் என சிரேஷ்ட பொருளாதார நிபுணர்கள் பலர் ஜனாதிபதி செயலாளரிடம் எடுத்துரைத்திருத்தனர். இந்த விடயத்தை ஜப்பானிலிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு செயலாளர் சமன் உடனடியாக தெரியப்படுத்தினார்.

அதே போன்று மேலும் சில பொருளாதார நிபுணர்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அறிவிப்பினால் ஏற்படக்கூடிய பாதக தன்மை குறித்து நேரடியாகவே ஜனாதிபதியுடன் தொடர்புக்கொண்டு விளக்கமளித்திருந்தனர்.

அதாவது தலைநகர் கொழும்பை  கேந்திரமாக கொண்ட உத்தேச பொருளாதார திட்டங்களுக்கு கடும் நெருக்கடியன நிலைமையை அதியுயர் பாதுகாப்பு வலயங்களால் ஏற்படும் என ஜனாதிபதியிடம் குறிப்பிட்டனர்.

இதன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக கவனத்தில் கொள்ளுமாறு செயலாளர் சமன் ஏக்கநாயகவிற்கு ஜனாதிபதி ரணில் பணிப்புரை விடுத்தார். ஏனெனில்  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகள் முன்வைத்த பரிந்துரைகள் குறித்து கவனத்தில் கொள்ளப்பட்ட நிலையிலேயே இந்த அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தீர்மானித்திருந்தார்.

இருப்பினும் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அறிவிப்பதற்கான உரிய சட்டமூலத்தை பின்பற்றாமை மற்றும் சட்டமாதிபருக்கு கூட அனுப்பி வைக்காது வேறொரு சட்டமூலத்தின் ஊடாக வர்த்தமானியை வெளியிட்டுள்ளமை குறித்து செயலாளர் சமன் ஏக்கநாயக ஜனாதிபதிக்கு அறிவித்தார்.

இந்நிலையில் உடனடியாக குறித்த வர்த்தமானியை சட்ட வலுவிழக்க  செய்யுமாறு  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான விசேட வர்த்தமானியை இரத்து செய்து அதற்கு பதிலாக புலனாய்வு பிரிவுகளை ஒன்றிணைத்த சிறப்பு பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குமாறும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு ஜனாதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி ரணிக் விக்கிரமசிங்க சனிக்கிழமை (ஒக்-01) நாடு திரும்ப உள்ள நிலையில் இந்த விடயங்கள் குறித்து கவனத்தில் கொண்டு செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலும் ராஜபக்சாக்களும்

2022-12-09 08:12:16
news-image

அரசியல் தீர்வுக்கு இந்திய முன்மாதிரி

2022-12-08 21:47:36
news-image

நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் கடன்...

2022-12-09 08:49:19
news-image

தேர்தலில் கட்சி சார்பற்று சுயாதீனமாக செயற்படுவேன்...

2022-12-05 10:51:49
news-image

போஷாக்கு குறைபாட்டால் சிறுவர்கள் கடுமையாக பாதிப்பு

2022-12-05 11:14:06
news-image

இன்று சர்வதேச எயிட்ஸ் தினம்: எயிட்ஸ்...

2022-12-01 10:26:30
news-image

தேர்தல்கள் மூலமாகவே ஆட்சிமுறையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தமுடியும்

2022-11-29 16:01:26
news-image

மகிந்தவும் சர்வதேச சதியும்

2022-11-28 08:17:47
news-image

மோடி - ரணில் சந்திப்புக்கு நாள்...

2022-11-26 16:25:50
news-image

சீனா தயக்கம் : இதுதான் காரணம்

2022-11-24 10:16:35
news-image

மஹாதிரின் படுதோல்வி தரும் பாடம்

2022-11-28 08:52:40
news-image

வெற்றிகரமான நல்லிணக்கத்துக்கு மக்களின் நல்லெண்ணமும் நம்பிக்கையும்...

2022-11-21 21:47:01