புதிய கட்­சியை ஆரம்­பிக்கும் வரையில் நானும் பார்த்துக் கொண்­டி­ருக்­கின்றேன். என்ன செய்­கின்­றார்கள் என்று பார்க்­கலாம். கூட்டு எதி­ரணி உறுப்­பி­னர்கள் தமது கட்­சியில் வந்து சேர்­வ­தற்கு அழைப்பு விடுக்­கப்­பட வேண்டும். அது ஒற்­று­மையை மற்­று­மல்ல சுதந்­திரக் கட்­சிக்கு சிறந்த பலத்­தையும் உரு­வாக்கும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருக்­கிறார். 

கடந்த வாரம் நடை­பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் அமைப்­பா­ளர்­க­ளுக்­கான கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார். 

கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் முன்னாள் வெளிவி­வ­கார அமைச்­ச­ரு­மான ஜீ.எல்.பீரிஸ் புதிய கட்­சியை உரு­வாக்­கி­யி­ருக்­கின்றார். அத்­துடன் கூட்டு எதி­ர­ணியின் மற்­று­மொரு முக்­கி­யஸ்­த­ரான பசில் ராஜ­பக் ஷ, ஜீ.எல்.பீரிஸ் உரு­வாக்­கி­யுள்ள ஸ்ரீ லங்கா பொது­ஜன முன்­ன­ணியில் இணைந்து கொண்­டி­ருக்­கின்றார். 

இந் நிலை­யி­லேயே கடந்த வாரம் ஜனா­தி­பதி தலை­மையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் கூட்டத்தில் மேற்கண்டவாறு ஜனாதிபதி கூறியிருக்கிறார்.